Thursday, December 31, 2015

நினைப்பது முடியும் !!!

நன்று கருது....
நாளெலாம் வினைசெய்..... 
நினைப்பது முடியும் !!!
- பாரதி 
2016 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! 

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்🎈🎈🎊🎊🎊😊Happy New Year ....
- Prem Anand

Tuesday, December 29, 2015

கடிப்பது

உதட்டை  கடிப்பது போல் மனசை கடிக்கிறாய் .....

தாரை தப்பட்டை

இளையராஜாவுக்கு அறிவு இருக்கான்னு கேட்கும் அளவுக்கு அறிவு இல்லாமல் இருக்கலாம் ... ஆனால்  இசையில் அவர் அறிவுக்கு நிகர் அவர்தான் ! அதற்கு தாரை தப்பட்டை ஒரு எடுத்துகாட்டு !

கருமம் புடித்த கவிதை

நீயோ Fixed Deposit !
நானே NPA ( Loan Account ) !
இதில் என்ன ஒற்றுமை ...
அதில் என்ன காதல் !
கருமம் புடித்த கவிதை வேற ....

Monday, December 28, 2015

மனிதர்கள் 2 ....

மனிதர்கள் 2 ....
                 நானும் என் நண்பனும் ஒரு இரண்டு கிலோ மீட்டர் மலை ஏறிய களைப்பில் , என் நண்பன் ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்த இருந்த நேரம் தான் அவர்களை ( அந்த முன்று மனிதர்களையும்  சந்திதேன் ) ...முதலில் அந்த நடுத்தர வயது மகனை தான் சந்தித்தோம் , அவர் உண்மையை உரு குலையாமல் சொன்னார் " நீங்கள்  இப்படியா வந்த வழி திரும்பலாம் என்று " சற்று யோசித்து போகலாம்  உங்களுக்கு தயிரியம் இருந்தால் போகலாம் என்றரு ,,,, பின் தான் சொன்னார் என் தாயும் , தந்தையும் வருகிறார்கள் என்று ...அவர்களை பார்த்த பிறகு தான் எனக்கு நம்பிக்கை வந்தது  ஆனால் அது பழக பழக தனம்பிகை யாக மாறியது ....நடக்க ஆரம்பிதேன் ,மூச்சு வாங்கியது , கால் தடுமாறியது ...நடந்தேன் ..அமராமல் நடந்தேன் ..... நடந்து கொண்டே இருந்தேன் .... ஒரு கட்டத்தில் முடியவே இல்லை ...அந்த மூன்று பேர் , அதே மலையாளிகள் , என்னை அவர்கள் வீடு பிள்ளையாக அன்பு காட்டி அரவணைத்து அழைத்து சென்றார்கள் ...என் நண்பனையும் அணைத்து சென்றார்கள் .... ஒரு கட்டத்தில் எங்களை சாமி போன்று காத்து சென்றார்கள் ,,,, காட்டு யானை கண் தொலைவில் நடமாடுகிறது .... காட்டு எருமையும் மேய்கிறது  ,,,, அந்த நொடிகளில் அந்த மூன்று பேரும் சொல்லாமல் சொல்லியே தயிரியத்தை சொல்ல வார்த்தை இல்லை .... இந்த சம்பவத்தை , நெகிழ்ச்சியை எனக்கு விவரிக்க வார்த்தை கிடைக்கவில்லை ,,,, இருபினும் அது சொல்லமுடியாத நெகிழ்ச்சி !
அந்த மூன்று பெயர் தெரியாது ....
எதுவும் தெரியாது ....
இப்படி முகம் தெரியாமல் உதவி செய்யும் மனிதர்கள் தன மா மனிதர்கள் !

இவர்களை  சந்தித்த பிறகு ஒரு சக்தி பிறந்து உள்ளது .... நாம் இன்னும் சற்று வழி தவறாமல் செம்மையாக நிலை அறிந்து உதவி செய்ய வேண்டும் என்று ....

மனிதர்கள் ..... தொடரும் ............

Sunday, December 27, 2015

எச்சில் அரசியல் .....

முகத்தில் தெறித்த எச்சில் துளிகளை யாருக்கும் தெரியாமல் தொடைத்து கொண்ட   செய்தியாளர்கள் ....இதை பற்றி  ஒரு  வரி  செய்தி  கூட வராமல்  பார்த்துகொண்ட  தமிழ் ஹிந்து நாளிதழ் .
வாழ்க பத்திரிகை ஜனநாயகம் !
ஓங்குக விஜயகாந்தின் மாண்பு !

Saturday, December 26, 2015

மனிதர்கள் ......

கடந்து ஒரு வரம் காலமாக மெகா  மிக நல்ல மனிதர்களை சந்திக்க நேர்ந்தது..... இத்தகை மனிதர்கள் தான்  இந்த உலகத்தை இயகிகிரர்கள் என்பதற்கு சந்தேகமே இல்லை ....
முதல் நிகழ்வு
  கடந்த வரம் என் நண்பன் மனோகர் உடன்  அய்யப்பன் கோவிலுக்கு சென்றிருந்தேன் , கோவிலுக்கு  செல்லும்போது பம்பை வழியாக சென்றேன் வரும் பொழுது புள் மேடு பாதை தேர்வு செய்து பயணிக்க ஆரம்பித்தோம் , மலையில் சற்று அந்த பாதை பற்றி விசாரித்து விட்டு நடக்க ஆரம்பித்தோம் , நான் அந்த பாதையில் நான்கு ஆண்டுக்கு முன்பு பயணித்தவன் அப்பொழுது எல்லாம் புள் மேடு வரைக்கு ஜீப் வரும் அனால் இப்பொழுது இருந்த சுழல் வேற ... புள் மேடு சென்று அங்கிருந்து  12 கிமீ மலை வழி பயணமாக சத்திரம் சென்று அடைந்து பேருந்து புடிக்க வேண்டும் இது தான் சுழல் , இந்த சுழலில் நடக்க ஆரம்பித்து விட்டாச்சு ... புள் மேடு பாதை என்பது முழுவதுமாக மேடாக இருக்கும் பாதை , நடக்க ஆரம்பித்து விட்டோம் ஒரு இரண்டு கிலோ மீட்டர் தொலைவு நடந்து உடன் ஒரு ஓரமாக என் நண்பன் அமர்ந்தான் ....எங்களை பின் தொடர்ந்து யாரும் நடக்கவில்லை ஒரு இனம் புரியாது பயம் வருகிறது , நம்பிக்கை சற்று தள்ளாடுகிறது  , அப்பொழுது தான் அந்த உயர்ந்து உள்ளகளை சந்திதேன்  , மொத்தம் மூன்று நபர்கள் , மலையாளிகள் !
ஒருவர் தாத்தா சாமி வயது 80 க்கு மேல் , பாட்டி சாமி இவர்களுக்கு 75 மேல் இருக்கும் , மூன்றாவது நடுத்தர வயது மதிப்புக்கு 40 இருக்கு , இவர்களின் மகன் !

இவர்களை ஏன் சாமி என்றும் , உயர்ந்த உள்ளங்கள் என்றும் சொல்லிகிறேன் என்பதை வருகின்ற வரிகளில் உணர்விர்கள் !

...... தொடரும் .........

புரிதல் !

நம்மை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்றால்  அது பிரச்சனை அல்ல...
நம்மை நாமே புரிந்து கொள்ளவில்லை என்றால் அது தான் உண்மையில் பிரச்சனை  ..
அது தான் மிக பெரிய பிரச்சனை ! 

Monday, December 21, 2015

உண்டு

மதி உண்டு ...
அதில் தமிழ் உண்டு ....
விதி உண்டு...
அதை வெல்லும் தகுதி உண்டு ...
நிதி உண்டு ...
அதில் நீதி உண்டு ....
தோல்வி உண்டு ...
அதில் வெற்றியும் உண்டு ...
கண் உண்டு ...
அதில் கவி உண்டு ...
உண்டு உண்டு உண்டு ...
அதில் ஊன் உண்டு ...
அதில் உயிர் உண்டு !

திமிரு

சிலர்  இவர்கள்  மட்டும் தான்  விவரம்  என்பது  போல்  நடந்து கொள்ளும்போது ....ஒரு மிக பெரிய கோவம் வந்து மறைகிறது ....

Saturday, December 12, 2015

இன்றைக்கு ரஜினிக்கு பிறந்தநாள் ....

இன்றைக்கு ரஜினிக்கு பிறந்தநாள் ....
ஒரு சின்ன சலசலப்பு கூட இல்லை Face Book'ல்....
மிக துல்லியமாக தெரிகிறது ஒரு அரசியல் சமுக மாற்றம் உருவாகபோவது   ! 

ஏய் கைபேசியே !

ஏய் கைபேசியே !
நீயும் எந்தன் காதலியும் ஒன்றுதான் ....
வலது காதில் பேசுவது இடது காதுக்கு கேட்காமல் பேசுவாய் ..
உலகில் கிடைக்காத சந்தோசத்தை திரட்டி தருவது நீ தான் ....
அடுத்த கணமே....
 தாங்கமுடியாத துக்கத்தை தருவதும் நீ தான் ! 

Wednesday, December 9, 2015

ஊடகங்களின் கண்கள் திறக் ஒரு திரவ வேண்டுகோள் !

சென்னையில் நடந்தது மிக பெரிய மனித சோகம் ! அதில் துளியும் சந்தேகம் இல்லை , அனால் கடலூரில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை அனால் ஏதோ மிக பெரிய பாதிப்பு என்று மட்டும் தெரிகிறது ,,, இந்த தெளிவு இல்லாத பார்வைக்கு காரணம் நம் ஊடகங்கள் தான் .
இன்னும் தூத்துக்குடி , திருநெல்வேலி  போன்ற ஊர்களின் நிலைமை முற்றிலும் தெரியவில்லை !
கொஞ்சம் ஊடகங்கள் தன்னுடைய கண்ணை சற்று விரித்து காட்டி உலகத்துக்கு நிதர்ச நிலைமையை விளக்கும் என்ற நம்பிகையுடன்....
ஒரு சாமானியன்  ..........................

Sunday, December 6, 2015

பச்சை காதலி !


ஒரு கருத்த மேகத்தின் ...
காதல் துளிகளுக்காக ....
காத்திருக்கும் ....
இச்சை கொண்ட...
 பச்சை காதலி !     

இயற்கையின் இதழ்கள் .....


புரிதல்

எல்லோரையும் ஏற்றுகொள்ள வேண்டாம் ....
புரிந்துகொண்டாலே  போதும் !

ஏழ்மையின் ஏழ்மை

இயலாமை தான் மிகப்பெரிய 

ஏழ்மை !

Wednesday, December 2, 2015

சென்னை மழை தண்ணீர் வடியடும்.....

ஒரு மிக பெரிய சோகத்தின் ஆளுமையில் மனம் வாடி கொண்டு இருக்கிறது ....
சென்னை மழை தண்ணீர் வடியடும்.....
உயிர் சேதம் இன்றி முடியட்டும் .....
உதவும் கரங்களும் ....
உதவி கேட்கும் உள்ளங்களும் ...
ஒன்று சேரட்டும் !
எல்லாம் உள்ள  இறைவனிடம்  வேண்டுகிறேன் !
சென்னை மழை தண்ணீர் வடியடும்.....
உயிர் சேதம் இன்றி முடியட்டும் .....

Monday, November 30, 2015

மௌனம்‬

இப்பொழுது எல்லாம்
நீயும் நானும் கடவுளின் மொழியில் தான் பேசுகிறோம் ! 
‪#‎மௌனம்‬

Saturday, November 28, 2015

சகிப்புத்தன்மை

சகிப்புத்தன்மை சகித்து போகிறது .....
இவர்களின் சகிப்புத்தன்மை பார்த்து !  

Friday, November 27, 2015

இலையில் மிஞ்சிய துளிகள் .....


இலையில் மிஞ்சிய துளிகள் ..... 

Thursday, November 26, 2015

துணிச்சல்,.......

தப்பு செய்வதற்கு துணிச்சல்  தேவை இல்லை ...
மன்னிப்பு கேட்கத்தான் மிக பெரிய துணிச்சல்  தேவை  !

Tuesday, November 17, 2015

சென்னை சபிக்கப்பட்ட மண் !

சென்னையில் ஒரு மழை காலம் ! 
கேட்பதற்கு Romantic feel   இருந்தாலும் ....
இது ஒரு சகிக்கமுடியாது வேதனைக்கு உரிய மழை காலம் ! 

இரண்டு நாட்களாக சென்னை நண்பர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபொழுது .... ஒரு பிரமாண்டமான எரிச்சல் வெளிபடுகிறது ....அதுவும் வேளச்சேரியில் இருக்கும் நண்பர்களின் நிலைமை சொல்ல வார்த்தை இல்லை.

உணவு மின்சாரம் இல்லாமை போன்ற பிரச்சனைகளுடன் காலை கடனை கூட கடத்த முடியாத சூழ்நிலை ! கொடுமையிலும் கொடுமை !

சென்னை சென்னையாக மாற ஆட்சியர்களும் இயற்கையும் ரட்சிக்க வேண்டும் ! 

முட்டாள்தனமான நம்பிக்கையாக இருந்தாலும் ....அது நம்பிக்கை !

முதலில் இறைவன் .....
என் சிறு வயது தொட்டு இறை நம்பிக்கையில் அதிகம் நாட்டம் உள்ளவன் , இப்போது நினைத்தாலும் சில நினைவுகள் அடக்கமுடியாத நகைச்சுவையை வெளிபடுத்துகிறது , எனக்கு சரியாக ஞாபகம் இல்லை அப்பொழுது நான் இரண்டாம் அல்லது முன்றாம் வகுப்பு படித்து கொண்டு இருப்பேன்  என்று நினைகிறேன் அப்பொழுது என் நண்பர்கள் திலீபன் பாரதி முத்து இவர்களிடம்  இவர்களுடன் சேர்ந்து முருகன் அய்யப்பன் விநாயகர் இதில் யார் பெரிய சாமி என்று போடி வைத்த நாட்கள் உண்டு .... இப்படி உருண்ட நாட்கள் ஒரு காலத்தில் எனக்கு இறைவன் மீதும் & நமக்கு மீறிய ஒரு சக்தி இருக்கு என்பதை உணர ஆரம்பிதேன் .... அந்த நாட்கள் முதல் இன்று வரை என் நெஞ் அருகே எனக்கு எப்பொழுது எல்லாம் சிரமம் ஏற்படுகிறதோ அபொழுது எல்லாம் நான் அழைக்கும் சாமி திரோதை அம்மன் இன்று வரை அப்புடி தான் அழைத்து கொண்டு இருகிறேன் சாமியும் உதவி கொண்டு உள்ளது , இதில் ஒரு இடத்துக்கு அப்புறம் நெறைய சாமி மீது நம்பிக்கை ஏற்பட்டது அதில் சிலவை
அய்யப்பன் , மாரியம்மன் , வெங்கடசலபதி , அய்யனார் , சிலகாரி அம்மன் , மதுரை வீரன் , வீரனார் , பூண்டி மேரி .....நீண்டு கொண்டே போகும் ..... இது முட்டாள் தனம் போல் தோன்றினாலும் இது ஒரு நம்பிக்கை ,,,, என்னை இந்த நம்பிக்கை நகர்த்தி கொண்டு இருக்கிறது ,,,,நானும் நகர்ந்து கொண்டு இருகிரரேன் ...ஆகையால் இந்த நம்பிக்கை நாளும் தொடரும் ! நம்பிக்கை ! சாமி நம்பிக்கை.

நாளை என் நெஞ்சருகே உள்ள வேறு ஒரு விடயத்தை எழுதுகிறேன் ! 

Saturday, November 14, 2015

நலம் சார்ந்த நலம் .....

மன நலம் சரி இல்லாத போது
உடல் நலத்திற்கு கேடு ஏற்பட்டால் ....
அதை விட கொடுமை வேறு எதுவும் இல்லை ! 

Tuesday, November 10, 2015

Vallam - NH 67

ஏனோ ....
எல்லா ஊரையும் இணைத்த தேசிய நெடுஞ்சாலை .....
என் ஊரை மட்டும் பிரித்து சென்றது !
- NH 67

Sunday, November 8, 2015

In the Rainy Mood

சொட்டும் மழை .....
சுடும் தேனீர் .....
இதை ரசிக்காமல் ...
வேறு எதை ரசிப்பது .....

மழை !

ஆயிரம் வஞ்சினாலும் இ்ழித்து பேசினாலும் ....நீ அழகுதான் மழை !

பிஜேபி - இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டால் சந்தோசம் !

உழல் , குடும்பஅரசியல் இதற்கு அப்பாற்பட்டது தனி மனித சுகந்திரம் , தன்மானம் , இனமானம் , மனிதாபிமானம் ......
இதை அழகாக தெளிவு செய்துள்ளது பீகார் தேர்தல் முடிவுகள் !

வாழ்க சோசியலிஸ்ட் இந்திய ! 

 பிஜேபி  -  இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டால் சந்தோசம் !


Saturday, November 7, 2015

Bharathidasan Poem about Condoms

‘காதலுக்கு வழிவைத்துக்

கருப்பாதை சாத்தக்

கதவொன்று கண்டறிவோம்

இதிலென்ன குற்றம்’

- பாரதிதாசன் 


இவருக்கு முன்னும் .....
 இவருக்கு பின்னும் ......
இது போல் கவிதை  எழுதவில்லை  !

இவர் ஆளுமை  ! அஞ்சாமை  !
சொல்லில்  சொல்ல  இயலாதது  !

Friday, October 30, 2015

அழகிய அரக்கியே

ஏய் .....அழகிய  அரக்கியே   ....
ஒரு நாள் நீ  வாயடி கொல்வதும் ....
மறு நாள் நீ  வாய்முடி கொல்வதும்.....
தொழில் ஆகி விட்டது
இதில் நான்  தினம் தினம் ....
உயிர் பெற்று வருவதால்
நானும் ஏசு  கிறிஸ்து ஆகிவிட்டேன்  !

-Prem Anand (ஏ ) Kannakaran 

Monday, October 19, 2015

மௌனம் ....

இரைச்சலில் மிக பெரிய இரைச்சல் ....
ஒரு சகிக்க முடியாத கூச்சல் ...
இதைவிட கொடுமையான பயங்கரவாதம் ,,,,
உன்னுடை மௌனம் !

Monday, September 28, 2015

Save - Ideograph of Indian Languages

Save - Ideographic of Indian Languages
As per 2001 population census it denotes there were 122 big languages in India (it denotes that languages were spoken over 10,000 peoples) & 1,599 small languages. The shocking news beyond this statistics denotes that more than 220 languages were died in past fifty years”.  
The above statistics clearly shows that Indian government had & has playing fantastic regional language game in our great democratic country. Implicating one regional language as compulsory in all the provisional states & automatically killing the native regional languages. Its right time to the government to think about the two language policy to avoid great marsh of language going to happen on the forthcoming decades . I need to raise the slogan designed by Arinangar Anna Durai during Anti Hindi moment in Tamil Nadu

“Hindi Never! English Ever!! ”

I can eventually say the international language never kill the regional language. Please the Great Indian Democratic government should take necessary steps  to SAVE the regional languages by avoiding strict Hindi policies.Please follow the regional languages as their administrative language in the provision State & English as administrative language of Country. Don’t try to implicate (you had already & successfully done ) Hindi as National Language !  


“Please Save our Regional & Small Languages!”

List of BJP Scams in 2015

பாஜக முயற்சியில் ஊழலற்ற ஆட்சி கலாச்சாரம்: மோடி பெருமிதம்

Then What is This Mr Honorable....

  1.   Corporate espionage - Officials of Reliance Industries, Reliance Anil Dhirubhai Ambani Group, Essar Group, Cairn India and Jubilant Energy were accused of stealing documents from the Petroleum Ministry.
  2.  Lalit Modi money laundering case- Lalit Modi ex-Indian Premier League (IPL)commissioner is accused of bid rigging, awarding contracts to his friends, accepting kickbacks on a broadcast deal, selling franchises to members of his family, betting and money laundering.He has absconded from India even as Enforcement Directorate is investigating the cases. He has many political friends and has taken political favours from External Affairs minister Sushma Swaraj and Rajasthan Chief MinisterVasundhara Raje of Bharatiya Janata Party.
  3.   Gujarat fisheries scam-400 cr-Gujarat ministers Purshottam Solanki of Bharatiya Janata Party and Dileepbhai Sanghani of Bharatiya Janata Party are accused of granting fishing contracts for 58 reservoirs to his favorite parties and did not follow the mandatory auctioning process.
  4.    Delhi power scam-8000cr-CAG has reported that Reliance Anil Dhirubhai Ambani Group BRPL is accused of inflating their dues to be recovered from consumers by almost Rs 8,000 crore. As per the report, the CAG claimed that there is scope for reducing tariffs in the city.


Etc………………………………………………..

Reference : https://en.wikipedia.org/wiki/List_of_scandals_in_India#2015

Friday, September 25, 2015

ஒரு அழகிய குளியல்....

ஒரு வார விடுமுறையை கொண்டாட ....
பல ஆயிரங்கள் தேவை இல்லை....
ஆயிரம் மைல்  தொலைவுகள்  பயணிக்க தேவை இல்லை ....
ஒரு நதிக்கரை .....
ஒரு அழகிய குளியல்.....
அது போதும் .....
மனம் மற்றும் உடல் சோர்வு நீங்க !
புது ஆறு (கல்லணை கால்வாய்) நோக்கி பயணம் ! 

குற்றம் கடிதல் ,,,

குற்றம் கடிதல் ,,,
ரொம்ப நாட்களுக்கு பிறகு மனம் உருகி பார்த்த படம் !
ஒரு புத்தகம் படித்த அனுபவம் !
 #socialthriller

Thursday, September 24, 2015

இப்போது எல்லாம்,,,,,,

ஏனோ தெரியவில்லை இப்போது எல்லாம் தன்மானம் தடுமாறி கொண்டே இருக்கிறது ....
இப்படி எல்லாம் இருக்க கூடியவன் அல்ல நான் ...
எனக்கே தெரிகிறது ... தெளிவாக தெரிகிறது ....
தடுமாறி ...தலை கிலாக பொய் கொண்டு இருகின்றேன் என்று ,,,
கண்ணீர் துளிகள் சிந்துகிறேன் ....
எதை எங்க பேச வேண்டும் என்றும் அறியாமல் புலம்புகிறேன் ...
யார் யாரிடமோ தயங்கி உதவி கேட்கிறேன் ,,,,
தெருவில் செல்கிறவேன் எல்லாம் உபதேசிகிரன்,,,,
இதற்கு எல்லாம் ஒரு முடிவு எடுத்து முடிவுகட்ட வேண்டும் ....
பாரதியின் வரிகள் தான் மனதில் ஓடுகிறது ....

""நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ !
சொல்லடி சிவசக்தி என்னை சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்...
வல்லமைதாராயோ இந்த மா நிலம் பயனுற வாழ்வதற்கு.... ""


Wednesday, September 23, 2015

வெண்ணிலா !

அழகாய்  மிதந்து செல்லும் மேகம் போல் ஆயிரம் பெண்ணை கண்டாலும் ...
நீ தான்  நிலையான  நிலா  ....
எந்தன் வெண்ணிலா !

Tuesday, September 22, 2015

தோல்வி .... வெற்றி .....

வார்த்தை தோற்று போகும்போது ...
மவுனம் வென்று நிற்கிறது ! 
மவுனம் தோற்று போகும்போது ...
பிரிவு வென்று நிற்கிறது !

Sunday, September 20, 2015

கடிகாரம்.....

கடிகாரம் 
ஓயாமல் உழைக்கும் ,,,
நொடி முள்ளினால் ....
நோகாமல் நகரும்
நிமிஷம் மற்றும் மணி முள்கள் !

உதவாக்கரையாய் உழைப்பதை விட ....

உற்ற நண்பன் ....
உயிர் வழி வந்த உறவு  .....
சுற்றம் ....
இவர்கள் யாருக்கும் உதவமுடியாத ....
உதவாக்கரையாய்  உழைப்பதை விட ....
உயிர் விடுவதே மேல் !

வங்கி கலாச்சாரம் ...........

பயம்தான் இங்கு வீரம் .....
வீரம்தான் இங்கு பயம் .....
பொய் உலகத்தின் நீதிகள் !!!

மௌனம் ..............

ஒரு சொல் வெல்லும் .....
ஒரு சொல் கொல்லும் ....
மௌனம் ??????

அழகு,,,,,,,,,,,

புன்னகை சிந்தி ....
அன்பு கசியும் ....
அனைத்தும் அழகு ...
அத்தனையும் கவிதை !!!

asset !

Profit is a liability while 
Loss is an Asset .
I'm just accounting my asset !

கண்கள்....

கண்கள்....
பல்லாங்குழி அல்ல புதைகுழி !

அலுவலகம் ..

காகித தணலில் ....
காவிய சிந்தனை ....

வலி...........

வலியோடு வழிதேடி ....
வழியிலே வலி வந்தது 
‪#‎வலி‬ தான் வழிபிறக்கும் வாழ்கை !

பொருளாதாரம்..........

வரவும் செலவும் கண்ணாலம் செஞ்சா ..
சேமிப்பு குழந்தையா பொறக்கும் ....
‪#‎இவனுக‬ சொல்லுற பொருளாதாரம் அப்புடி இருக்குது

Fusion & Confusion

Every fusion has its own confusion ...
Every confusion has its own fusion ..

சில முடிவுகள் !

அழியும் என்று தெரிந்தும் ...
அழகாய் கோலம் இடுவதுபோல் ...
இருக்கிறது ..
என்னுடைய சில முடிவுகள் !

ஏமாற்றம் ........

எதிர்பார்ப்புகள் எப்போதும் ...
எதிரான பார்வைக்கே கொண்டுசெல்கிறது....

கேள்விகள் !!!

போகாத ஊருக்கு வழி கேட்ட சொல்லலாம் ...
இல்லாத ஊருக்கு வழி கேட்ட ???
 
அப்புடி இருக்கு சிலர் கேக்கும் கேள்விகள் !!!

மேகம்............

ஒளிந்து ஒளிந்து மிதந்து போகும் மேகம் போல ....
என் நெஞ்சுக்குள் மிதந்து போகிறாய் ....


மாலை பொழுதுகள் !

இருளும் ....
மஞ்சளும் ...
கவிதை பாடும் ...
மாலை பொழுதுகள் !

காரணம் ...

எழுத்து பிழைக்கு எழுதுகோல் எப்படி காரணமாகும் .....
இறைவா !

Sunday, September 13, 2015

Debit .... Credit ,,,,,,

Every debit has its own credit .... Every credit has its own debit !

கொலை........

காகிதம் .... ஒரு மரத்தின் திட்டமிட்ட கொலை !

கிறிஸ்துகள் !

அப்பாக்கள் .... சிலுவையில் அறையபடாத இயேசு கிறிஸ்துகள் !

அறிவாளி ............

நான் முட்டாள் போல் நடிப்பதால் ....சில அற்ப பதர்கள் அறிவாளி ஆனதாக நினைக்கிறது ! ! !

உதவாக்கரையாய் ............

உதவாக்கரையாய் உழைப்பதை விட ஊர் தூத்தும் வேலை இல்லாதவன் என்பதே மேல் !

Saturday, August 22, 2015

எழுதபடாத கவிதை !

வெக்கம் !
எழுதபடாத கவிதை !

Monday, August 3, 2015

அடித்து உடைத்து என்ன உங்கள் அரசவை கோட்டையா ?


அடித்து உடைத்து என்ன உங்கள் அரசவை கோட்டையா ?
சாராய கடையை உடைத்தற்கு இவ்வளவு கோவமா ....
கம்பியை கொண்டு அடிக்கிரிங்க ...
பொம்பள பிள்ளைகள உதைத்து தள்ளுரிங்க 
கொடுமைய இருக்குடா !!

நினைவு .......

நினைவு இருக்கும்வரை ....
உன் நினைவு இருக்கும் !

பீ +

எது உனக்கும் வேண்டும் என்பதை மட்டும் சிந்தி !
எது உனக்கு வேண்டாம் என்பது வேண்டாமல் போய்விடும் !

காதல்

தியாகம் என்பதற்கு இரவல் வாங்கிய வார்த்தை தான் காதல்

பெருநிறுவன நெறிமுறைகள் - Corporate Ethics

மறுத்து பேசினாலும்
சிரித்து பேசு ...........

வாடா மனமே வா ...

வாடா மனமே வா ...
வாடா மனமே வா .....
யாரை வாட்டி ...
யாரை கொல்ல பார்க்கிறாய் ....
பாரதி வழி வந்தவன்டா ....
துன்பம் மிக உழன்று ....
சாவேன் என்று நினைத்தாயோ ...
செத்தாலும் ....
சாம்பலில் கருவாகி ...
புதிய உயிர் ஆவேன் ....
வாடா மனமே வா ...
வாடா மனமே வா ....

Monarchy

Four news channels renewal of license was cancelled by Modi Government. 
‪#‎Nation‬ marching towards Monarchy

வாழ்கை !

வலியோடு வழிதேடி ....
வழியிலே வலி வந்தது
‪#‎வலி‬ தான் வழிபிறக்கும் வாழ்கை !
 — feeling thoughtful atKumbakonam/கும்பகோணம்.

நினைவுகள் சுகமானது

நண்பர்கள் தினத்தின் மீது நம்பிக்கை இல்லை ...
இருபினும் " நினைவுகள் சுகமானது "
எனது உயிரின் உயிர் துளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் !
 — in Vallam.

பதினெட்டாம் பெருக்கு ...

காவேரி நதி கரை நாகரிகத்தின் முக்கிய விழா !
ஆடி பெருக்கு ! (ஆடி -18, பதினெட்டாம் பெருக்கு ...)
பொங்கட்டும் காவேரி !
பொங்கட்டும் புது வாழ்வு !
 — feeling breeze of River Cauvery atCauvery River Bank.

மது விலக்கு

மது விலக்கு என்பது மது ஒழிப்புக்கு இல்லை .... மது மீது உள்ள ஒரு பயம் இல்லாத கலாச்சாரம் மாண்டு போவதற்கு முதல் படி

ஆடி 18

அரிசி , வடை , சுளியன், குழி பணியாரம் , மஞ்சள் கயிறு , இட்லி ,விளாம்பழம் , கரி கொழம்பு ....ஆடி 18
 — celebrating ஆடி 18 inVallam.

சாராய ராஜ்ஜியம்

தமிழகம் முழுவதும் சாராய கடைகளுக்கு காவல்துறை காவல் #காரி உமிழும் நொடிகள் 

Monday, July 27, 2015

அப்துல் கலாம்..........

கண்ணெல்லாம் கண்ணீர் .....
மனசு எல்லாம் உன் நினைவு ....

வெள்ளை முடிகொண்ட ....
வெள்ளை மனம் படைத்த ....
வெள்ளந்தி மனிதன் .
நம்மை சோக வெள்ளத்தில் ஆழ்த்திவிட்டார் ....
கால் இல்லா  பிள்ளைக்கு ....
கால் கூடுத்த திருமகன்....
நம்மை கலங்க வைத்துவிட்டு  போய்விட்டார் ....
தமிழின் தலைமகன் ....
நம்மின் அடையலாம் ....
மொழி ...
மதம் ....
கலாச்சாரம் ....
இதற்கு அப்பாற்பட்ட ஒரு மனிதன் அப்பாற்பட்டு  போய்விட்டார் !!
திருக்குறளை தினம் சொன்னவன் ....
தலை உயர்ந்த பின்னும் தமிழ் சொன்னவன் ..
இன்று நம்மை தவிக்க விட்டு போய்விட்டார் ....
ராக்கெட் சயின்ஸ் யை சாமானியனுக்கும்....
புரியும் படி சொன்ன தலைவன் ....
காற்றோடு கலந்துவிட்டார் !
கண்ணெல்லாம் கண்ணீர் .....
மனசு எல்லாம் உன் நினைவு ....

தமிழ் போல் ....
உன் புகழ் .....
வாழும் அய்யா !!!
கண்ணெல்லாம் கண்ணீர் .....

Tuesday, July 14, 2015

எம்.எஸ்.வீ .....

எம்.எஸ்.வீ .....
இசையோடு இசையாக....
காற்றோடு காற்றாக கரைந்துவிட்டார் !!

தமிழ் தாய்க்கு இசை அமைத்தவன் ....
தாயிடம் சென்றடைந்தான் !!
("நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்.......)
ஒரு தலைமுறை இசையின் சொந்தக்காரர் ....
தமிழ் பாடல்களில் தமிழ் தமிழாக தெரிந்தது ....
இவர் காலத்தில்தான் !
கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு உயிர்  தந்தவன் ...
தமிழ் போல் ....
தமிழ் இசைபோல் ...
இவன் புகழ் ! வாழும் !!!
கண்ணீருடன் இசையில் கரைகிறேன் !!!

Monday, July 6, 2015

பிரகடனம் .....

எது உனக்கும் வேண்டும் என்பதை மட்டும் சிந்தி !

எது உனக்கு வேண்டாம் என்பது வேண்டாமல் போய்விடும் !

Wednesday, July 1, 2015

கண்கள் ....

கண்கள் ....
பார்வைக்குதான் பல்லாங்குழி ....
உண்மையில் அது புதைகுழி !

நட்சத்திரம்

நட்சத்திர கண்களால்
கவர்ந்தது  அன்நாள் ....
அக்னிநட்சத்திரமாய்
சுட்டெரிப்பது  இன்நாள் !

Tuesday, June 30, 2015

நினைவுகள் !

நீ நினைக்க மறந்தாலும் .....
உன் நினைவுகள் மறக்வில்லை ,,,,,
நினைவு இருக்கும்வரை ....
உன் நினைவு இருக்கும் !

Tuesday, June 2, 2015

தொ.......

தொடரும் நிழல் போல ....
தொடாமல் நான் தொடர்ந்தேன் ....
தொலைந்தும் தொலையாத நிலவை ....

Monday, May 4, 2015

Forget !!!

மறந்துவிட நினைக்க மட்டும் ....
மறந்துவிடுகிறேன்!!!!

Sunday, April 26, 2015

திறமை

திறமை இல்லாமல் இருப்பதே ...
பெரிய திறமைதான் ....
- கனாக்காரன்

Friday, April 24, 2015

மலர்கள்

மணமேடையை அணிசெய்யும்...
மண(ன)ம் இல்லாத மலர்கள் ...

Thursday, April 23, 2015

புது மொழி....

மதியாதார் வீட்டில் ....
மதியம்  சாப்பிடு ....
- புது மொழி

Wednesday, April 22, 2015

Weight......

கை ஏந்தும் போதுதான் ....
கைகளின் சுமை தெரிகிறது ....

Monday, April 20, 2015

A baby step of inequality ...

A voluntary return of LPG subsidiary .....

offline அவதிகள் .....

Whatsapp இல் நீ எப்போதும் online ....
Facebook 'ல் seen before 2mins .....
IMO'ல்  எப்போதும் அலறல் ....
ஆனால் எனக்கு மட்டும் ...
நீ ....யுகம் யுகமாக ....
offline'தான்  !!!

--கனாக்காரன்

Sunday, April 19, 2015

Morning Chalks ....


உன் சந்தோஷம் .....
உனக்குள் இருக்கிறது ......

Morning Chalks ....

Thursday, April 16, 2015

Lips ......

A Two Piece of Ice ....
With Burning Coal !
-lilly Lips 

Wednesday, April 15, 2015

நிழல்கள்

நிறங்களின் அழுகையும் சிரிப்பும் ...
நிழல்கள் அரியது !!!

Tuesday, April 14, 2015

குண்டுஊசி....

குண்டு ஊசி என்னை (குண்டுதான் wink emoticon ).....
தூக்கி எறிந்துவிட்டாய் ....
தேடும் போது தெரியும் என் அருமை !!!
இப்படிக்கு
குண்டுஊசி.

Wednesday, April 8, 2015

நாகூர் ஹனிபா காலமானார்.......

 உணர்வு கூடுத்த குரல் உறைந்தது .....நாகூர் ஹனிபா காலமானார்.......






ஜெயகாந்தன் இயற்கையோடு இரண்டறக் கலந்தார் .....

சிறுகதை சிங்கம் மறைந்தது !!!
ஜெயகாந்தன் இயற்கையோடு இரண்டறக் கலந்தார் .....

Thursday, April 2, 2015

குறைந்தபட்சம் ....

சத்தியத்திற்கு சாகவேண்டாம் .....
குறைந்தபட்சம் ....
சோறுக்கு சோரம் போகாமல் இருந்தால் போதும்.....
-ஆனந்த்

Friday, March 27, 2015

இன்றைய காதலில் ....

இன்றைய காதலில் ....
கற்பை தவிர ....அனைத்தையும் ...
கற்புபோல்  பாதுகாக்கபடுகிறது 

உண்மை காதல் ....

கண்டம் கண்டமாக  தேடிப்பார்த்தேன் ....
உண்மை காதலை ....
எந்தன் மனம் சொன்னது ....
போட முட்டாள் !!!!
போயி  ...
 CONDOM CONDOMaga தேடிப்பாருடா  என்றது!!! 

Thursday, March 19, 2015

கவலை !!!!

கை இழந்தவனுக்கு....
கைரேகை மீது கவலை !!!!

Sunday, March 15, 2015

கவிதைகள

எனக்கு பின் .....
உன்னை பெச ....
நான் விட்டு செல்லும்  சின்ன நினைவுகள்.... 
எந்தன்  கவிதைகள் !

Wednesday, January 14, 2015

ஜல்லிக்கட்டு கலாச்சாரம் முடிவுக்குவந்தது !!!

இரண்டாயிரம் ஆண்டு பாரம்பரியம் - ஜல்லிக்கட்டு கலாச்சாரம்  முடிவுக்குவந்தது !!! சோழர் காலத்தில் தொடங்கி .... நாயக்கர், மராத்தியர் , வெள்ளையர்கள் காலத்தில்  போராடி நடத்தி வந்த ஜல்லிகட்டை ....மக்களின் முதல்வர் காலத்தில் இழந்துவிட்டோம் !!!

வாழ்க மக்களின் முதல்வர் !!!
வாழ்க தமிழ் நாடு முதல்வர் !!!