Tuesday, November 17, 2015

முட்டாள்தனமான நம்பிக்கையாக இருந்தாலும் ....அது நம்பிக்கை !

முதலில் இறைவன் .....
என் சிறு வயது தொட்டு இறை நம்பிக்கையில் அதிகம் நாட்டம் உள்ளவன் , இப்போது நினைத்தாலும் சில நினைவுகள் அடக்கமுடியாத நகைச்சுவையை வெளிபடுத்துகிறது , எனக்கு சரியாக ஞாபகம் இல்லை அப்பொழுது நான் இரண்டாம் அல்லது முன்றாம் வகுப்பு படித்து கொண்டு இருப்பேன்  என்று நினைகிறேன் அப்பொழுது என் நண்பர்கள் திலீபன் பாரதி முத்து இவர்களிடம்  இவர்களுடன் சேர்ந்து முருகன் அய்யப்பன் விநாயகர் இதில் யார் பெரிய சாமி என்று போடி வைத்த நாட்கள் உண்டு .... இப்படி உருண்ட நாட்கள் ஒரு காலத்தில் எனக்கு இறைவன் மீதும் & நமக்கு மீறிய ஒரு சக்தி இருக்கு என்பதை உணர ஆரம்பிதேன் .... அந்த நாட்கள் முதல் இன்று வரை என் நெஞ் அருகே எனக்கு எப்பொழுது எல்லாம் சிரமம் ஏற்படுகிறதோ அபொழுது எல்லாம் நான் அழைக்கும் சாமி திரோதை அம்மன் இன்று வரை அப்புடி தான் அழைத்து கொண்டு இருகிறேன் சாமியும் உதவி கொண்டு உள்ளது , இதில் ஒரு இடத்துக்கு அப்புறம் நெறைய சாமி மீது நம்பிக்கை ஏற்பட்டது அதில் சிலவை
அய்யப்பன் , மாரியம்மன் , வெங்கடசலபதி , அய்யனார் , சிலகாரி அம்மன் , மதுரை வீரன் , வீரனார் , பூண்டி மேரி .....நீண்டு கொண்டே போகும் ..... இது முட்டாள் தனம் போல் தோன்றினாலும் இது ஒரு நம்பிக்கை ,,,, என்னை இந்த நம்பிக்கை நகர்த்தி கொண்டு இருக்கிறது ,,,,நானும் நகர்ந்து கொண்டு இருகிரரேன் ...ஆகையால் இந்த நம்பிக்கை நாளும் தொடரும் ! நம்பிக்கை ! சாமி நம்பிக்கை.

நாளை என் நெஞ்சருகே உள்ள வேறு ஒரு விடயத்தை எழுதுகிறேன் ! 

No comments:

Post a Comment