Monday, December 5, 2016

தலை மகளுக்கு .... இரங்கல் ....

சொந்தம் என்று யாரும் இல்லை ...
பெத்த பிள்ளை ஒன்றும் இல்லை ...
பந்தம் பற்று எதுவும் இல்லை ...
 ஆனால் ஆயிரம் ஆயிரம் கோடி மக்கள் மனதில் அம்மா என்று வாழ்ந்து சென்றாய் ... பச்சை வண்ண சேலை கட்டி ...
மலர் முகம் பார்க்கும்போது ...
ஊர் உலகம் அழுகிறது ...
உண்மையிலே ...
கண்ணீர் மழை பொழிகிறது ...
ஏதோ சோகம் ...
உள்ளம் எல்லாம் பரவுகிறது .. ..

 கண்ணீருடன் ...

பிரேம் ஆனந்த


Thursday, September 8, 2016

பிரச்சனை

பணம்
மனம்
எல்லாம் பிரச்சனை .....

எளிமை இல்லை

கவனில் வைத்த Angry Bird 
நீ தான் ....
தொடுதிரை போல் வாழ்க்கை எளிமை இல்லை ....
இலக்கை எட்டுவதில் !

தகவல் !

ஒரு பெண் முதலமைச்சர் ...
அதிலும் காவல் துறை அமைச்சராக இருக்கும் நாட்டில் ...
100 நாளில் 195 கொலைகள் ...
அதில் 175 பெண்கள் ....
இதில் யாரையும் யாரும் குறை சொல்லவில்லை ,,,,
தகவல் !

பக்குவோம் இல்லாத நிலை......

110 ராணி....
 எதிர் அணியே இல்லாமல் காவல் துறை மானியத்தை தாக்கல் செய்திர்களே ... இன்றையே சட்ட ஒழுங்கு நிலைமையை பார்த்தீர்களா ...
 சென்னை ரயில் நிலையம் .... 
கரூர் கல்லூரி ... தூத்துக்குடி ....
தாம்பரம் ... etc ... 
எல்லாம் பெண்களுக்கு எதிரான தாக்குதல் ... 
உயிர் இழப்பு... இதற்கு எல்லாம் நீங்கள் காரணம் என்று சொல்லவரவில்லை .... 
ஆனால் உங்களின் இந்த பக்குவோம் இல்லாத நிலை காரணம் ஆகிவிடும் என்பதே காரணம் ... 
புரிந்து உடனடி நடவடிக்கை எடுக்க 110 ராணியை கேட்டுக்கொள்கிறேன் ...

நீதி.........

நீதிமன்றம்!
எமாந்தவனை ஏமாற்றுவது !

மழை ....

மழை ....
ஒரு வரம் ! 
ஒரு அழகு !

அழகு .

நீ அழகாய் இருப்பதை நீ அறியாமல் இருப்பதே அழகு .... 

சண்டை .....

கருப்பு மேகங்களுக்கும் ...
வெள்ளை மேகங்களுக்கும் சண்டை ... 
மோதி கொண்டதில் .... 
நிறம் பார்க்க முடியாத மின்னல் மின்னுகிறது !

இல்லை ....இல்லை ....

படித்ததை எல்லாம் சொல்ல வேண்டியதும் இல்லை ,
சொன்னதை எல்லாம் படித்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை ....
#பேச்சு

கண்ணா......

நெஞ்சம் பொறுக்கவில்லை ...




நெஞ்சம் பொறுக்கவில்லை ... 
எந்தன் சோழ தேசத்தின் இன்றைய நிலைமை !

வெட்கப்பட்டு சிவந்த வானம் !!!

மாலை நேரம் .... 
தென்றல் காற்று ... வெட்கப்பட்டு சிவந்த வானம் !!!! — in Thiruchi-Thanjavur Rd Tamil Nadu Vallam India

வரவேண்டியது வருவதில்லை ..

கண்கள் தெரிகிறது ... 
வண்ணங்கள் தெரியவில்லை ... 
கவிதை வருகிறது ... 
வார்த்தை வரவில்லை ... 
பயணம் பயணிக்கிறது .... 
வழிகள் வசப்படவில்லை....
வெற்றி வந்தது ...
வசந்தம் திரும்பவில்லை ...
வருவது வருகிறது ..
வரவேண்டியது வருவதில்லை ...


--ஆனந்த் 

துரு....



ஆயிரம் தான் துரு பிடித்தாலும் ... சில பிடிப்புகள் விடுவது இல்லை ! 

#Photography day

இருக்கை.....

எறும்பு .....

Tuesday, August 30, 2016

நீ தான்...

நீ தான் ...
நான் கொஞ்சும் கை குழந்தை ....
நீ தான் ...
நான் காலையில் அருந்தும் பச்சை தேனீர் ...
நீ தான் ....
நான் இரவில் கேட்டு கண் மயங்கும் இளையராஜா ...
நீ தான் ....
நீ தான்...
நீ தான் ,,,,
அது
நான் தான் ,,,
நான் தான்  !!! 

Thursday, August 25, 2016

வாழ்கை தொடங்கியது !

நம்மை பற்றி இறக்கப்படுவதற்கு ....
நம் நிலைமையை புரிந்து கொள்வதற்கு ....
நம்மை விட்டால் இந்த உலகத்தில் யாரும் கிடையாது
 என்ற உண்மை நிலைமை உணரும் நொடியில் உண்மை வாழ்கை தொடங்கியது ! 

அழகிலும் அழகான நிகழ்வுகள்...

ஒரு மொட்டை மாடி ... 
 வானமும் மின்னலும் சண்டையிடும் நேரம் ...
தென்றலுடன் சில சரால் துளிகள். .. 
படிப்பதற்கு புத்தகம் ... 
நினைப்பதற்கு நிறைய நினைவலைகள் .... 
கேட்பதற்கு இளையராஜா ...  
நடுவே வேர் கடலை  .. 
கண் அடிக்கும் தெரு விளக்கு ....
 கடந்து செல்லும் இரவு ....
 இந்த நொடிகள் .....
அழகிலும் அழகான நிகழ்வுகள் .

Sunday, August 14, 2016

நா.முத்துக்குமார் நம்மை விட்டு மறைந்தார் ......



கண்கள்  கலங்குதப்பா  ....
கவிதை  அழுகுதப்பா ....
காதல்  சொன்னவன்....
மண்ணை  விட்டு போனான்  ....
நம்மை விட்டு போனான்  .....

கேட்டாலே  இனிக்கும்  பாட்டு  ....
கேக்க கேக்க  தூண்டும் பாட்டு  ...
தந்த  தமிழின்  கலை மகன்  ...
மண்ணை  விட்டு போனான்  ....
நம்மை விட்டு போனான்  ....

அதிகம்  பேசாதவன்  ...
அழகாய்  கவிதை  எழுதியவன் ....
மண்ணை  விட்டு போனான்  ....
நம்மை விட்டு போனான்  ....

எத்தனை பாடல்களில்   ....
உன் வரிகளில்  ...என்னை நான் வெளிப்படுத்தியது
" என்  காதல்  சொல்ல  நேரமில்லை " .....
எத்தனை  எத்தனை  வரிகள் .....


தாலாட்டு  பாடல்  எழுதியவன்  ....
என்னை
ஒப்பாரி பாடி   அழுகவிட்டான்  ....

மண்ணை  விட்டு போனாலும்  ....
மனதை  விட்டு மறையாத  ....
பாடல் படைத்தவன் ...

உன் நினைவலைகளில்  ,,,,,
உன்  பாடல்களில்  ....
கரைகிறது  கண்ணீர்கள்  !

மண்ணை  விட்டு போனாலும்
மனதை  விட்டு  போகாத  ....
பாடலில்  வாழ்வை  !
காலம்  எல்லாம் .....

கண்ணீர்களுடன்  ....







Monday, August 8, 2016

இழுக்கு..

தன் அரிசியில் 
தன் பெயர் இல்லை என்பதே தன்மான இழுக்கு....

போட பொங்கல் ......

பசுக்களை காப்பதாகக் கூறி வன்முறையில் ஈடுபடும் நபர்கள் தண்டிக்க வேண்டும் = மோடி ...
நிலை இல்லை ...
நிதார்ணம் இல்லை ...
ஆனால் ...
பதவி மட்டும் உண்டு உன்னிடம் ...
மோடி நமோ நமோ ...

நாசர் கடை இடியாப்பம்...

Wednesday, August 3, 2016

GST _ இது மாநில சுயாட்சிக்கு எதிரானது

அன்றாட வாழ்வில் நாம் அனுபவிக்கும்  நிறைய சேவைகள் மாநில அரசால் வழங்கப்படுவது .... மத்திய அரசின் பங்கு என்பது மிக மிக குறைவு ... மாநில அரசின் முக்கிய வருவாய் ஆனா மாநில அரசின் வரி  விதிப்பை மத்திய அரசாங்கம் கட்டுப்படுத்துவது என்பதும் , அதை மத்திய அரசாங்கம் வசூல் செய்து தரும் என்று சொல்வது எந்த அளவுக்கு நம்ப முடியும் ... இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் மாநில அரசு கேட்கும் நிதியில் இருந்து 30 சதவீதம் மத்திய அரசாங்கம் அளித்தால் பெரிய விசயமா இருக்கிறது ... இந்த நிலையில் ஒரு மாநில அரசின் முக்கிய வருமானத்தை மத்திய அரசாங்கத்தை நம்பி இருக்க வேண்டும் ....இந்து சூழல் உருவாகும்போது நிலைமை இன்னும் மோசம் அடையும் .... இது மாநில சுயாட்சிக்கு எதிரானது .... இது மிகா பெரிய பின் விளைவை ஏற்படுத்தும் என்பதும் மட்டும் புரிகிறது ! மோடி நமோ நமோ ! வாழ்க ஜி யெஸ் டீ. ...GST ! #DOWN #DOWN

Monday, August 1, 2016

தேவதை

மின் மினி பூச்சி கண்கள்  இரும்பு இதயத்தை இழுக்கும் காந்த சிரிப்பு ... சிலிர்க்க வைக்கும் சிணுங்கள் ..
அனிச்சை அழகா ...
அழகு அனிச்சைய என்று புரியவில்லை...
  அது உதடா இல்லை இரத்த சோலையா ...
கண் சிமிட்டி கவிதை எழுத்துகிறாய் ... மல்லிகை பூவுக்கு மனவருத்தம் என்னை விட அழகா மணமா இருக்கிறாள் என்று ...
ஒரு வண்ணத்து பூச்சியின் உடை ... ஆகா மொத்தத்தில் அழகானவள் .... தேவதை என்ற சொல் ஒற்றை பொருத்தம் அவளுக்கு !

Sunday, July 31, 2016

இந்த வசனம் ஆழ் மனதில் ஒலித்து கொன்டே இருக்கிறது....

இந்த வசனம் ஆழ் மனதில் ஒலித்து கொன்டே இருக்கிறது....
We are not slave !
We are employee !
You are employer....
Treat everybody same ...
It's your duty !
Otherwise you will face the consequences ...
I am not threatening you ....
I am just warning you ....

கனகாம்பரம்....


கனகாம்பரம்.... நீயும் அழகுதான் ...

குணம்

பூவுடன் சேர்ந்த நாறும் மணக்குமாம் ....
அப்புடி என்றால் நாருடன் சேர்ந்த பூ என்ன நாறுமா .... 
ஒரு சேர்கையினால் குணம் மாறும் என்றால் அது குணமே இல்லை

நகர்வுகள்

தனிமையை கண்டு பயந்ததும் இல்லை ... 
கூட்டத்தை கண்டு வெறுத்தத்தும் இல்லை.... 
நகர்வுகள் நகர்ந்து கொன்டே இருக்கும்....

தலைக்கவசம்



தன்மானமும் தற்காப்பும் தலைக்கவசம் .....நம் வாழ்க்கைக்கு !

வர்ணிக்க முடியாத சுகம் !

ஒரு உடல் சோர்ந்த வேலையில் ...நீண்ட நேரம் இடம் இல்லாமல் நின்றபிறகு கிடைக்கும் இடம் அதிலும் ஜன்னல் ஒர இடம் ! 
வர்ணிக்க முடியாத சுகம் !

மறதி

மறந்ததை போல் மறந்துவிட்டாய் மறந்ததை !

Corporate சந்தையில்

Corporate சந்தையில் கோபம் விலை குறைவாகவும் ..... 
சிரிப்பு விலை உயர்வாகவும் ......
விற்கப்படுகிறது !

சொரணை..

வெக்கம் கேட்ட  சொரணை  வந்து சில நொடிகளில் நாவை சுழற்றி நல்லா இதயங்களை காவு வாங்கி விடுகிறது .....
ஒரு அனிச்சை செயலை தேடி கொண்டு இருகிறேன் ,,,,
சொரணை கெட்டு வாழ்வதற்கு ! 

Wednesday, July 20, 2016

மிளகாய் பூ ....


மிளகாய் பூ ....

விற்கப்படுகிறது !

Corporate சந்தையில் கோபம் விலை குறைவாகவும் ..... 
சிரிப்பு விலை உயர்வாகவும் ......
விற்கப்படுகிறது !

Monday, July 18, 2016

இறைவி....

ஊமை போல் நடிக்காதே ...நீ ஊமையும் இல்லை செவிடும் இல்லை ... நீ ஒரு இரும்பு மனம் படைத்த இறைவி !

ஊமை ஆனே

உவமை தேடி ..
ஊமை ஆனேன் !
உந்தன் கழுத்து ஓர ...
தேமல் அழகை கவிதை ஆக்க ...

Wednesday, July 13, 2016

மனம் உணர்கிறது .....

முன்பு போல் இல்லை இப்பொழுது எல்லாம்  ( கடந்து  இரண்டு ஆண்டுகால)  ...
அந்த சாலையில் பயணிக்கும்போது எப்போதும் இறுகி இருக்கும்  இதயம் இப்பொழுது அதை உணர்வது இல்லை ....
எனது நினைவலைகளில் எப்பொழுதும் ஒளிபரப்படும் உனது பாடல்கள் இப்பொழுது முன் அறிவிப்பு இன்றி நிறுத்தப்பட்டுள்ளது ...
இந்த தாக்கத்தை நீ விரும்பி உருவாக்கியது என்பதை மட்டும் மனம் உணர்கிறது .....

Sunday, July 10, 2016

தொட்டால் சிணுங்கி......


தொட்டால் சிணுங்கி......
உன் பெயரே போதும் உன் குணத்தை சொல்ல ...
இங்கு நிறையபேர் அது போல் இருப்பது இல்லை ....

தண்ணீரே ,,,

தண்ணீரே ,,,
உன்னை போல் வாழ்ந்து விட ஆசை ...
எந்த அடையாளமும் இல்லாமல் ...
எல்லாருக்கு அன்றாட வாழ்வில் ....
ஒரு தவிர்க்கமுடியாத...
 ஏன் விடைகொடுக்க முடியாத ....
விடையாக இருந்துவிட ....
ஆனால் என்ன செய்ய ...
ஒரு பயம் வந்து மறைகிறது ...
என்னையும் உன் போல் பாட்டிலில்  அடைத்து
பேதம் செய்யது விடுவார்கள் என்று !
இருக்கின்ற பேதம் போதும் ...
வாழவிடுங்கள்  !
தண்ணீர் உடன்  சேர்த்து  என்னையும் ,,,,
வாழவிடுங்கள்  !


==============================
ஆனந்த்
==============================

புங்கை பூவே !

அதிபுத்திசாலிகள் .....

அதிபுத்திசாலிகள் .....
நீர் ஊத்த வழி இல்லாமல் தளம் அமைத்த புத்திசாலிகள்..
வாழ்க உங்கள் பணி ...
Ariyalur Railway Station

Sunday, July 3, 2016

நிறபேதம் !

வெளுத்தாலும் கறுத்தாலும் ....
உதிரத்தின் நிறம் சிவப்பு தான் ! 
காரி உமிழும் எச்சிலுக்கு நிறம் இல்லை இங்கு ...
உனக்குள் மட்டும் எதற்கு இத்தனை நிறபேதம் !

நீதான் நான் ... நான்தான் நீ ...

குளத்தில் நீர் ...
நீரில் மீன்...
மீனின் கண்...
கண்ணில் நீ ...
நீதான் நான் ...
நான்தான் நீ ...

கோபமும்

எல்லா வகை கோபமும் ஒரு சொல்லமுடியாத அன்பின் வெளிப்பாடுதான் !

தன்மானத்தை இழக்காதே ...

உழைப்புதான் நம் தன்மானம் ....
உழைக்க மறக்காதே ....
தன்மானத்தை இழக்காதே ...

புரட்சி தலைவி ! இதய தெய்வம் ! வாழ்க !

சம்பளத்தில் ஒரு சதவிதம் அகவிலை படி குறைந்தது ....
- விலைவாசி குறைந்து உள்ளதாம் !
அது எந்த நாட்டில் என்றுதான் தெரியவில்லை !
மோடி நமோ நமோ !
இதையும் சேர்த்து சொல்லி வைப்போம் ....
புரட்சி தலைவி ! இதய தெய்வம் !
வாழ்க !
Salary reduced by one percentage ! Because of reduce in price inflation ! Is it ? Feeling worse on Indian Government

மானிடம் காப்போம் !

போராட துணிந்தால் தான் ....
போர்க்களம் கிடைக்கும் ! 
வெற்றி என்று தெரிந்துவிட்டால் ...
தோல்விக்கு மரியாதையை இல்லை ....
மரியாதையை இல்லை என்றால் ...
மானிடம் கிடையாது ....
மனிதனாக இருப்போம் ...
மானிடம் காப்போம் !

An instance of love ...

An instance of love ...
அந்த மஞ்சள் பூ பூத்த சாலை ...
ஒரு கோடை காலத்தில் மழை ஓய்ந்த நேரம் ....
என் சுண்டுவிரல் பற்றி நீ ! 
ஒரு நடை பயணம் ....

LIFE

Limited Resources .....
Unlimited Wants ! 
‪#‎LIFE‬

இப்படியும் நகர்கிறது .. சில நாட்கள் !

பிஞ்ச செருப்பு ....
மஞ்சள் பூத்த வெள்ளை சட்டை ....
சவரம் செய்யாத முகம் ....
இப்படியும் நகர்கிறது .. 
சில நாட்கள் !

கண் அழகி நீ தானே !

கண்களால் கவர்ந்தவள் ....
கண்களால் கொன்றவள் ...
கண்ணே என் 
கண்மணியே ...
கண்களில் அன்பும் ஆயுதமும் கொண்ட ...
கண் அழகி நீ தானே !

அனைத்தும் கவிதைதான் !

ஒரு நதிக்கரை ....
நிலா ...
மரம் ...
காற்று ...
பிச்சைக்காரன் ...
அள்ளி பூ ...
தவளை ...
தண்ணி பாம்பு ...
காதலி ...
கணவு ...
நண்டு ...
வரப்பு ...
வயல்வெளி ...
சாரல் காற்று ..
சாமங்கி பூ ...
ஒற்றை பாலம் ...
.................
அனைத்தும் கவிதைதான் !

அவசரம் அவசரம் ....

அவசரம் 
அவசரம் அவசரம் ....
எல்லாம் அவசரம் இல்லாத வேளைக்கு தான் ....

என் school time interval Mahalacto நீ !

என் school time interval Mahalacto நீ !

Social scolding .

Don't treat unequal as equal ! 
Social scolding .

Come out Corporates !

Most of the classic corporates are utilizing there CSR - Corporate Social Responsibility fund towards renovating Temples . Pl come out ! There were several area untouched ! 
Like demolition of foreign crops ! Plastic eradication ! E waste ......disposal .....etcccccccccccccc
Come out Corporates !

success


A system which runs in limited resource & achieves 100 % efficiency is called success !

அறிவாளி,,,,,,,,,,

நீங்கள் அறிவாளி என்று கொண்டாடும் சிலரை என்னால் மனிதராக கூட ஏற்று கொள்ளமுடியவில்லை ‪#‎idiotic‬

FDI is not reform , it is a sick ...

Mr.Modi .. Pl understand ! 
FDI is not reform , it is a sick ...
Domestic production for Domestic demand is solution ! ...
Just come out from foreign fades ! 
‪#‎Modi‬ NAMO NAMO !

என் நீ ... உன் நான் ...


தென்றல் காற்றுக்கு ஏங்கும் கார்மேகங்கள் !

தென்றல் காற்றுக்கு ஏங்கும் கார்மேகங்கள் !

பச்சை நிறமே

பச்சை நிறமே ! — at Kumbakonam/கும்பகோணம்.

Dancing of lights !

சித்திரை திருநாள் ......
Dancing of lights !
 — at Pillayarpatti.

அழகான கம்பீரம் ....

அழகான கம்பீரம் .... — at Thanjavur/தஞ்சாவூர்.

நம்பிக்கை என்றால் நம்பிக்கை தான்

கல் என்றால் கல் தான் ...
மண் என்றால் மண் தான் .. .
நம்பிக்கை என்றால் நம்பிக்கை தான் ....
 — in Vallam.

அழிக்க முடியாத அடையாளம் .

ஒரு மா மன்னனின் அழிக்க முடியாத அடையாளம் .....
தஞ்சை சித்திரை தேரின் ஒரு பகுதி !
 — at Thanjavur Big Temple.


சித்திரை தேர்.

தஞ்சை பெரியகோவில் சித்திரை தேர்.... 

சித்திரை பௌர்ணமி .....

நிலவொளியில் நினைவலைகள் .....
சித்திரை பௌர்ணமி .....
 

இலை உதிர் காலம் !

ஆடை இழந்த மரங்கள் !
இலை உதிர் காலம் !
 

பகல் நேர ரயில் பயணங்கள் ...

பகல் நேர ரயில் பயணங்கள் ...
நம்மை பற்றி நமக்கே தெரியாமல் சிந்திக்க வைக்கும் நொடிகள் ....

பூட்டு

திறக்கப்படாத பூட்டுக்கு எல்லாம் சாவி தொலைக்கப்படவில்லை ...
தொலைக்கப்பட்டது போல் மறைக்கப்பட்டுள்ளது ...
மறைக்கப்பட்டது போல் 
மறக்கப்பட்டுள்ளது ....

கண்களில் குளிர் ..

இலையின் துளிர்..... 
கண்களில் குளிர் ...

பூவே !

பூ பூவாய் புன்னகைக்கும் பூவே !

கொடியிலே........

சில இலைகள் ..

சில இலைகள் ..
சில நொடிகள் ...
நம் கவனத்தை ஈர்த்து மறைகிறது ....

பார்வதி மகனை ...

முகம் யானை ..
வயிறு பானை ...
அந்த 
பார்வதி மகனை ...

Royal ......

உயிரிலும் மேலானது .....

My school....

நினைவுகளுடன் .....
Don Bosco ....


மங்கும் மாலை ...


மாலை மங்கும் மாலை ...

நீ என்வீட்டு மிளகாய் ..

ஆயிரம் தான் காரமாக இருந்தாலும் ...
நீ என்வீட்டு மிளகாய் ...
அதுவும் என் செல்ல பச்சை மிளகாய் ...
நீ என்றைக்கும் எனக்கும் தித்திக்கும் சர்க்கரை தான் !

yummy ......



Ice cream's r not just ice cream's ! 
#faluda

நினைவலைகள் !



அழைப்பிதழ் எல்லாம் அழைப்பிதழ் மட்டும் அல்ல ....
நினைவலைகள் !

மலரின் மொழியில்.....

பச்சை...... இச்சை....

Sunday, June 26, 2016

இறைவா ......!

உன் திமிருக்கு ...
நான் ஆள் இல்லை ..
காரணம் இல்லாமல் ...
பேசுவதும் வெறுப்பதும் ...
என்ன ஜென்மம் ...
நீ எல்லாம் !
அழகும் திமிரும் ...
ஆண்டவன் உனக்கு தந்த ...
வரம் இல்லை ...
சாபம் !
நீ உணர போவதும் இல்லை ..
நான் உன்னை வெறுக்க போவதும் இல்லை ....
இறைவா ...
எனக்கு ஒன்று தா ...
அது வரமோ சாபமோ ....
அவளை மறக்க வேண்டும் !
இறைவா ......!

Three years .....

மூன்று வருடம் ஓடி விட்டது ...
ஒரு சிறிய மாற்றமும் இல்லை ...
கிணற்றில் விழுந்த கல்லாக   இருந்தால்  பாசி பிடித்திருக்கும் ...
வெயிலில் கிடந்த இரும்பாக இருந்தால் துரு பிடித்திருக்கும் ....

இங்கு ....
அதே  அதே ...
இதே இதே ....
என்ன கொடுமை ....
இறைவா !