Sunday, August 14, 2016

நா.முத்துக்குமார் நம்மை விட்டு மறைந்தார் ......



கண்கள்  கலங்குதப்பா  ....
கவிதை  அழுகுதப்பா ....
காதல்  சொன்னவன்....
மண்ணை  விட்டு போனான்  ....
நம்மை விட்டு போனான்  .....

கேட்டாலே  இனிக்கும்  பாட்டு  ....
கேக்க கேக்க  தூண்டும் பாட்டு  ...
தந்த  தமிழின்  கலை மகன்  ...
மண்ணை  விட்டு போனான்  ....
நம்மை விட்டு போனான்  ....

அதிகம்  பேசாதவன்  ...
அழகாய்  கவிதை  எழுதியவன் ....
மண்ணை  விட்டு போனான்  ....
நம்மை விட்டு போனான்  ....

எத்தனை பாடல்களில்   ....
உன் வரிகளில்  ...என்னை நான் வெளிப்படுத்தியது
" என்  காதல்  சொல்ல  நேரமில்லை " .....
எத்தனை  எத்தனை  வரிகள் .....


தாலாட்டு  பாடல்  எழுதியவன்  ....
என்னை
ஒப்பாரி பாடி   அழுகவிட்டான்  ....

மண்ணை  விட்டு போனாலும்  ....
மனதை  விட்டு மறையாத  ....
பாடல் படைத்தவன் ...

உன் நினைவலைகளில்  ,,,,,
உன்  பாடல்களில்  ....
கரைகிறது  கண்ணீர்கள்  !

மண்ணை  விட்டு போனாலும்
மனதை  விட்டு  போகாத  ....
பாடலில்  வாழ்வை  !
காலம்  எல்லாம் .....

கண்ணீர்களுடன்  ....







No comments:

Post a Comment