பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே........
Thursday, December 31, 2015
நினைப்பது முடியும் !!!
Tuesday, December 29, 2015
தாரை தப்பட்டை
இளையராஜாவுக்கு அறிவு இருக்கான்னு கேட்கும் அளவுக்கு அறிவு இல்லாமல் இருக்கலாம் ... ஆனால் இசையில் அவர் அறிவுக்கு நிகர் அவர்தான் ! அதற்கு தாரை தப்பட்டை ஒரு எடுத்துகாட்டு !
கருமம் புடித்த கவிதை
நானே NPA ( Loan Account ) !
இதில் என்ன ஒற்றுமை ...
அதில் என்ன காதல் !
கருமம் புடித்த கவிதை வேற ....
Monday, December 28, 2015
மனிதர்கள் 2 ....
Sunday, December 27, 2015
எச்சில் அரசியல் .....
முகத்தில் தெறித்த எச்சில் துளிகளை யாருக்கும் தெரியாமல் தொடைத்து கொண்ட செய்தியாளர்கள் ....இதை பற்றி ஒரு வரி செய்தி கூட வராமல் பார்த்துகொண்ட தமிழ் ஹிந்து நாளிதழ் .
வாழ்க பத்திரிகை ஜனநாயகம் !
ஓங்குக விஜயகாந்தின் மாண்பு !
Saturday, December 26, 2015
மனிதர்கள் ......
முதல் நிகழ்வு
கடந்த வரம் என் நண்பன் மனோகர் உடன் அய்யப்பன் கோவிலுக்கு சென்றிருந்தேன் , கோவிலுக்கு செல்லும்போது பம்பை வழியாக சென்றேன் வரும் பொழுது புள் மேடு பாதை தேர்வு செய்து பயணிக்க ஆரம்பித்தோம் , மலையில் சற்று அந்த பாதை பற்றி விசாரித்து விட்டு நடக்க ஆரம்பித்தோம் , நான் அந்த பாதையில் நான்கு ஆண்டுக்கு முன்பு பயணித்தவன் அப்பொழுது எல்லாம் புள் மேடு வரைக்கு ஜீப் வரும் அனால் இப்பொழுது இருந்த சுழல் வேற ... புள் மேடு சென்று அங்கிருந்து 12 கிமீ மலை வழி பயணமாக சத்திரம் சென்று அடைந்து பேருந்து புடிக்க வேண்டும் இது தான் சுழல் , இந்த சுழலில் நடக்க ஆரம்பித்து விட்டாச்சு ... புள் மேடு பாதை என்பது முழுவதுமாக மேடாக இருக்கும் பாதை , நடக்க ஆரம்பித்து விட்டோம் ஒரு இரண்டு கிலோ மீட்டர் தொலைவு நடந்து உடன் ஒரு ஓரமாக என் நண்பன் அமர்ந்தான் ....எங்களை பின் தொடர்ந்து யாரும் நடக்கவில்லை ஒரு இனம் புரியாது பயம் வருகிறது , நம்பிக்கை சற்று தள்ளாடுகிறது , அப்பொழுது தான் அந்த உயர்ந்து உள்ளகளை சந்திதேன் , மொத்தம் மூன்று நபர்கள் , மலையாளிகள் !
ஒருவர் தாத்தா சாமி வயது 80 க்கு மேல் , பாட்டி சாமி இவர்களுக்கு 75 மேல் இருக்கும் , மூன்றாவது நடுத்தர வயது மதிப்புக்கு 40 இருக்கு , இவர்களின் மகன் !
இவர்களை ஏன் சாமி என்றும் , உயர்ந்த உள்ளங்கள் என்றும் சொல்லிகிறேன் என்பதை வருகின்ற வரிகளில் உணர்விர்கள் !
...... தொடரும் .........
புரிதல் !
நம்மை நாமே புரிந்து கொள்ளவில்லை என்றால் அது தான் உண்மையில் பிரச்சனை ..
அது தான் மிக பெரிய பிரச்சனை !
Monday, December 21, 2015
உண்டு
மதி உண்டு ...
அதில் தமிழ் உண்டு ....
விதி உண்டு...
அதை வெல்லும் தகுதி உண்டு ...
நிதி உண்டு ...
அதில் நீதி உண்டு ....
தோல்வி உண்டு ...
அதில் வெற்றியும் உண்டு ...
கண் உண்டு ...
அதில் கவி உண்டு ...
உண்டு உண்டு உண்டு ...
அதில் ஊன் உண்டு ...
அதில் உயிர் உண்டு !
திமிரு
சிலர் இவர்கள் மட்டும் தான் விவரம் என்பது போல் நடந்து கொள்ளும்போது ....ஒரு மிக பெரிய கோவம் வந்து மறைகிறது ....
Saturday, December 12, 2015
இன்றைக்கு ரஜினிக்கு பிறந்தநாள் ....
ஒரு சின்ன சலசலப்பு கூட இல்லை Face Book'ல்....
மிக துல்லியமாக தெரிகிறது ஒரு அரசியல் சமுக மாற்றம் உருவாகபோவது !
ஏய் கைபேசியே !
நீயும் எந்தன் காதலியும் ஒன்றுதான் ....
வலது காதில் பேசுவது இடது காதுக்கு கேட்காமல் பேசுவாய் ..
உலகில் கிடைக்காத சந்தோசத்தை திரட்டி தருவது நீ தான் ....
அடுத்த கணமே....
தாங்கமுடியாத துக்கத்தை தருவதும் நீ தான் !
Wednesday, December 9, 2015
ஊடகங்களின் கண்கள் திறக் ஒரு திரவ வேண்டுகோள் !
இன்னும் தூத்துக்குடி , திருநெல்வேலி போன்ற ஊர்களின் நிலைமை முற்றிலும் தெரியவில்லை !
கொஞ்சம் ஊடகங்கள் தன்னுடைய கண்ணை சற்று விரித்து காட்டி உலகத்துக்கு நிதர்ச நிலைமையை விளக்கும் என்ற நம்பிகையுடன்....
ஒரு சாமானியன் ..........................
Sunday, December 6, 2015
Wednesday, December 2, 2015
சென்னை மழை தண்ணீர் வடியடும்.....
சென்னை மழை தண்ணீர் வடியடும்.....
உயிர் சேதம் இன்றி முடியட்டும் .....
உதவும் கரங்களும் ....
உதவி கேட்கும் உள்ளங்களும் ...
ஒன்று சேரட்டும் !
எல்லாம் உள்ள இறைவனிடம் வேண்டுகிறேன் !
சென்னை மழை தண்ணீர் வடியடும்.....
உயிர் சேதம் இன்றி முடியட்டும் .....