Tuesday, August 30, 2016

நீ தான்...

நீ தான் ...
நான் கொஞ்சும் கை குழந்தை ....
நீ தான் ...
நான் காலையில் அருந்தும் பச்சை தேனீர் ...
நீ தான் ....
நான் இரவில் கேட்டு கண் மயங்கும் இளையராஜா ...
நீ தான் ....
நீ தான்...
நீ தான் ,,,,
அது
நான் தான் ,,,
நான் தான்  !!! 

Thursday, August 25, 2016

வாழ்கை தொடங்கியது !

நம்மை பற்றி இறக்கப்படுவதற்கு ....
நம் நிலைமையை புரிந்து கொள்வதற்கு ....
நம்மை விட்டால் இந்த உலகத்தில் யாரும் கிடையாது
 என்ற உண்மை நிலைமை உணரும் நொடியில் உண்மை வாழ்கை தொடங்கியது ! 

அழகிலும் அழகான நிகழ்வுகள்...

ஒரு மொட்டை மாடி ... 
 வானமும் மின்னலும் சண்டையிடும் நேரம் ...
தென்றலுடன் சில சரால் துளிகள். .. 
படிப்பதற்கு புத்தகம் ... 
நினைப்பதற்கு நிறைய நினைவலைகள் .... 
கேட்பதற்கு இளையராஜா ...  
நடுவே வேர் கடலை  .. 
கண் அடிக்கும் தெரு விளக்கு ....
 கடந்து செல்லும் இரவு ....
 இந்த நொடிகள் .....
அழகிலும் அழகான நிகழ்வுகள் .

Sunday, August 14, 2016

நா.முத்துக்குமார் நம்மை விட்டு மறைந்தார் ......



கண்கள்  கலங்குதப்பா  ....
கவிதை  அழுகுதப்பா ....
காதல்  சொன்னவன்....
மண்ணை  விட்டு போனான்  ....
நம்மை விட்டு போனான்  .....

கேட்டாலே  இனிக்கும்  பாட்டு  ....
கேக்க கேக்க  தூண்டும் பாட்டு  ...
தந்த  தமிழின்  கலை மகன்  ...
மண்ணை  விட்டு போனான்  ....
நம்மை விட்டு போனான்  ....

அதிகம்  பேசாதவன்  ...
அழகாய்  கவிதை  எழுதியவன் ....
மண்ணை  விட்டு போனான்  ....
நம்மை விட்டு போனான்  ....

எத்தனை பாடல்களில்   ....
உன் வரிகளில்  ...என்னை நான் வெளிப்படுத்தியது
" என்  காதல்  சொல்ல  நேரமில்லை " .....
எத்தனை  எத்தனை  வரிகள் .....


தாலாட்டு  பாடல்  எழுதியவன்  ....
என்னை
ஒப்பாரி பாடி   அழுகவிட்டான்  ....

மண்ணை  விட்டு போனாலும்  ....
மனதை  விட்டு மறையாத  ....
பாடல் படைத்தவன் ...

உன் நினைவலைகளில்  ,,,,,
உன்  பாடல்களில்  ....
கரைகிறது  கண்ணீர்கள்  !

மண்ணை  விட்டு போனாலும்
மனதை  விட்டு  போகாத  ....
பாடலில்  வாழ்வை  !
காலம்  எல்லாம் .....

கண்ணீர்களுடன்  ....







Monday, August 8, 2016

இழுக்கு..

தன் அரிசியில் 
தன் பெயர் இல்லை என்பதே தன்மான இழுக்கு....

போட பொங்கல் ......

பசுக்களை காப்பதாகக் கூறி வன்முறையில் ஈடுபடும் நபர்கள் தண்டிக்க வேண்டும் = மோடி ...
நிலை இல்லை ...
நிதார்ணம் இல்லை ...
ஆனால் ...
பதவி மட்டும் உண்டு உன்னிடம் ...
மோடி நமோ நமோ ...

நாசர் கடை இடியாப்பம்...

Wednesday, August 3, 2016

GST _ இது மாநில சுயாட்சிக்கு எதிரானது

அன்றாட வாழ்வில் நாம் அனுபவிக்கும்  நிறைய சேவைகள் மாநில அரசால் வழங்கப்படுவது .... மத்திய அரசின் பங்கு என்பது மிக மிக குறைவு ... மாநில அரசின் முக்கிய வருவாய் ஆனா மாநில அரசின் வரி  விதிப்பை மத்திய அரசாங்கம் கட்டுப்படுத்துவது என்பதும் , அதை மத்திய அரசாங்கம் வசூல் செய்து தரும் என்று சொல்வது எந்த அளவுக்கு நம்ப முடியும் ... இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் மாநில அரசு கேட்கும் நிதியில் இருந்து 30 சதவீதம் மத்திய அரசாங்கம் அளித்தால் பெரிய விசயமா இருக்கிறது ... இந்த நிலையில் ஒரு மாநில அரசின் முக்கிய வருமானத்தை மத்திய அரசாங்கத்தை நம்பி இருக்க வேண்டும் ....இந்து சூழல் உருவாகும்போது நிலைமை இன்னும் மோசம் அடையும் .... இது மாநில சுயாட்சிக்கு எதிரானது .... இது மிகா பெரிய பின் விளைவை ஏற்படுத்தும் என்பதும் மட்டும் புரிகிறது ! மோடி நமோ நமோ ! வாழ்க ஜி யெஸ் டீ. ...GST ! #DOWN #DOWN

Monday, August 1, 2016

தேவதை

மின் மினி பூச்சி கண்கள்  இரும்பு இதயத்தை இழுக்கும் காந்த சிரிப்பு ... சிலிர்க்க வைக்கும் சிணுங்கள் ..
அனிச்சை அழகா ...
அழகு அனிச்சைய என்று புரியவில்லை...
  அது உதடா இல்லை இரத்த சோலையா ...
கண் சிமிட்டி கவிதை எழுத்துகிறாய் ... மல்லிகை பூவுக்கு மனவருத்தம் என்னை விட அழகா மணமா இருக்கிறாள் என்று ...
ஒரு வண்ணத்து பூச்சியின் உடை ... ஆகா மொத்தத்தில் அழகானவள் .... தேவதை என்ற சொல் ஒற்றை பொருத்தம் அவளுக்கு !