Wednesday, December 10, 2014

விக்ரமாதித்யன் ( ஸ்வாமிகள் ஜனங்கள் - கவிதை)

செருப்பால்  அடிக்கும் வரிகள் .......

""
சோரம்
தொழிலாகக்கொண்டதில்லை நான்
ஏனினும்
சோரம்போகிறவர்களிடம்
சோறுவாங்கித் தின்னநேர்கிறது  எனக்கு ....

திருடிப்
பிழைத்ததில்லை நான்
ஏனினும்
திருடிப்பிழைப்பவர்களிடம்
யாசகம்வாங்கி வாழநேர்கிறது எனக்கு .....

கூட்டிக்
கொடுத்ததில்லை நான்
ஏனினும்
கூட்டிக்கொடுப்பவர்களின்
கூடத் திரியநேர்கிறது எனக்கு

காட்டிக்
கொடுத்தில்லை நான்
ஏனினும்
காட்டிக்கொடுப்பவர்களின்
கருணையில் காலம்கழிக்கநேர்கிறது எனக்கு ..... ""

--விக்ரமாதித்யன் ( ஸ்வாமிகள் ஜனங்கள் - கவிதை)

No comments:

Post a Comment