Monday, July 27, 2015

அப்துல் கலாம்..........

கண்ணெல்லாம் கண்ணீர் .....
மனசு எல்லாம் உன் நினைவு ....

வெள்ளை முடிகொண்ட ....
வெள்ளை மனம் படைத்த ....
வெள்ளந்தி மனிதன் .
நம்மை சோக வெள்ளத்தில் ஆழ்த்திவிட்டார் ....
கால் இல்லா  பிள்ளைக்கு ....
கால் கூடுத்த திருமகன்....
நம்மை கலங்க வைத்துவிட்டு  போய்விட்டார் ....
தமிழின் தலைமகன் ....
நம்மின் அடையலாம் ....
மொழி ...
மதம் ....
கலாச்சாரம் ....
இதற்கு அப்பாற்பட்ட ஒரு மனிதன் அப்பாற்பட்டு  போய்விட்டார் !!
திருக்குறளை தினம் சொன்னவன் ....
தலை உயர்ந்த பின்னும் தமிழ் சொன்னவன் ..
இன்று நம்மை தவிக்க விட்டு போய்விட்டார் ....
ராக்கெட் சயின்ஸ் யை சாமானியனுக்கும்....
புரியும் படி சொன்ன தலைவன் ....
காற்றோடு கலந்துவிட்டார் !
கண்ணெல்லாம் கண்ணீர் .....
மனசு எல்லாம் உன் நினைவு ....

தமிழ் போல் ....
உன் புகழ் .....
வாழும் அய்யா !!!
கண்ணெல்லாம் கண்ணீர் .....

Tuesday, July 14, 2015

எம்.எஸ்.வீ .....

எம்.எஸ்.வீ .....
இசையோடு இசையாக....
காற்றோடு காற்றாக கரைந்துவிட்டார் !!

தமிழ் தாய்க்கு இசை அமைத்தவன் ....
தாயிடம் சென்றடைந்தான் !!
("நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்.......)
ஒரு தலைமுறை இசையின் சொந்தக்காரர் ....
தமிழ் பாடல்களில் தமிழ் தமிழாக தெரிந்தது ....
இவர் காலத்தில்தான் !
கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு உயிர்  தந்தவன் ...
தமிழ் போல் ....
தமிழ் இசைபோல் ...
இவன் புகழ் ! வாழும் !!!
கண்ணீருடன் இசையில் கரைகிறேன் !!!

Monday, July 6, 2015

பிரகடனம் .....

எது உனக்கும் வேண்டும் என்பதை மட்டும் சிந்தி !

எது உனக்கு வேண்டாம் என்பது வேண்டாமல் போய்விடும் !

Wednesday, July 1, 2015

கண்கள் ....

கண்கள் ....
பார்வைக்குதான் பல்லாங்குழி ....
உண்மையில் அது புதைகுழி !

நட்சத்திரம்

நட்சத்திர கண்களால்
கவர்ந்தது  அன்நாள் ....
அக்னிநட்சத்திரமாய்
சுட்டெரிப்பது  இன்நாள் !