Saturday, January 25, 2014

சரவணா .....இன்று உனக்கு பிறந்தநாள் .....



சரவணா .....
உனக்கு
எதிரி என்று எவனும் இல்லை ......
நண்பர் என்று பலரும் உண்டு ....
அளந்து  பேசுவாய் ....
அழகாக பேசுவாய்.....
கவர்ந்து பேசுவாய் .....
கனிந்து பேசுவாய் .....
அனால்....
எவனையும் கேவலப்படுத்தி  பேசி ..
நான் அறியவில்லை....


நான் உன்னை மறக்க நினைக்வில்லை  .....
உன் மரணத்தை  மறக்க நினைகிறேன்  ....
மாறாக .....
உன் மரணமே உன்னை நினைக்கவைக்கிறது.....

பொங்கல் , தீபாவளி என்றால்
நான் கண்விழித்து வாசலில்... கண் திறப்பது.....
உந்தன் முகம்தான் .......

இந்த பொங்கலன்று
கண்விழித்து வாசலில் கண்ணீர்விட்டேன் ....
உன்னை நினைத்து .....

உன் விட்டை கடக்கும்போது
நெஞ்சு படபடக்கிறது ......
நைனாவை பார்க்கும் தைரியத்தை இழந்துவிட்டேன் ....
உன் அம்மாவை உன்னுடன் இறுதி சடங்கில் பார்த்தது தான் ....
ஹரியை இறுகிய முகத்துடன் .....
செய்வது அறியாமல் சந்திக்கிறேன் .....

அந்த தெரு முக்கமும்.....
சுவரும் .....
பலர் அறியாத மொழியில் ......
என்னுடன் சேர்ந்து அழுகிறது ......

எங்கு  சென்றாய் ......
இன்று உனக்கு பிறந்தநாள் .....
கண்ணீருடன் தேடுகிறேன் ......

உந்தன் ..... எய்த்தவிட்டு ஆனந்த் ....

No comments:

Post a Comment