Thursday, January 10, 2013

என்ன பெத்த ஆத்தாவே !!!


பெத்தவளே !!!
        என்ன பெத்த ஆத்தாவே !!!
ஒருத்தியும் ஒன்ன போல எண்ணலையே !
அந்த சாமியும் ஒன்ன போல காக்கலையே !
இன்பத்துல கருவானாலும்....
                 துன்பத்துலதான் பொறந்தேன் !!!
216 எழும்பையும் முறுக்குண்ணு முருச்சுகிட்டு 
மொசகுட்டியா விழுந்தேன் !!!

நான் அழுதப்ப நீ சிரிச்சது .....
நான் பொறந்தப்ப தானே !!!
பொறவு .....
என் கண்ணுல தண்ணீ  வந்த ....
உன் நெஞ்சுல இரத்தம் சிந்தும் !!!

என்னத்த சொல்லுறது  ....
எத எத சொல்லுறது !!!
மொரு மொரு தோசையும் ...
மணமணக்கும் நெய்யும் ....
இடுச்ச இட்லி பொடியும் .....
கலந்து நீ கொடுக்கையில ....
உன் காலடியே சொர்க்கம் !!!

உன் கத்திரிக்கா சாம்பாருக்கு ....
பசிக்காத வயிரும் பசிக்குமாத்தா !!!
வாழக்கா வறுவலுக்கு......
வாழ்க்கையெல்லாம் அடிமை ஆத்தா !!!

உன் தண்ணீ கொடத்துல பொறந்தேன் ....
என்ன தண்ணீ தூக்க வச்சுட்டியே  !!!
கண்ணெல்லாம் கண்ணீரு !!!
ஊரெல்லாம் உன் பேச்சு !!!
நெஞ்செல்லாம் உன் நெனப்புத்தான் !!!
மாண்டாலும் நீ தெய்வம் ....
எந்தன் கொலதெய்வம் ....
  ஆத்தா !!!!
                  --ஆனந்த்

No comments:

Post a Comment