Wednesday, January 30, 2013



ஊது பத்தி ஸ்டான்ட் !!!

Tuesday, January 29, 2013

Auspicious Occasion


It's occasion related with remember of  past peoples who lived as king and reasonable life during life time .

Thursday, January 24, 2013



Golden Evening ! ! !

Sunday, January 13, 2013


தை பிறக்கட்டும் !!!
வழி பிறக்கட்டும் !!!
கழனி செழிக்கட்டும் !!!
விவசாயி சிரிக்கட்டும் !!!!
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!!!
            -ஆனந்த்

Thursday, January 10, 2013

என்ன பெத்த ஆத்தாவே !!!


பெத்தவளே !!!
        என்ன பெத்த ஆத்தாவே !!!
ஒருத்தியும் ஒன்ன போல எண்ணலையே !
அந்த சாமியும் ஒன்ன போல காக்கலையே !
இன்பத்துல கருவானாலும்....
                 துன்பத்துலதான் பொறந்தேன் !!!
216 எழும்பையும் முறுக்குண்ணு முருச்சுகிட்டு 
மொசகுட்டியா விழுந்தேன் !!!

நான் அழுதப்ப நீ சிரிச்சது .....
நான் பொறந்தப்ப தானே !!!
பொறவு .....
என் கண்ணுல தண்ணீ  வந்த ....
உன் நெஞ்சுல இரத்தம் சிந்தும் !!!

என்னத்த சொல்லுறது  ....
எத எத சொல்லுறது !!!
மொரு மொரு தோசையும் ...
மணமணக்கும் நெய்யும் ....
இடுச்ச இட்லி பொடியும் .....
கலந்து நீ கொடுக்கையில ....
உன் காலடியே சொர்க்கம் !!!

உன் கத்திரிக்கா சாம்பாருக்கு ....
பசிக்காத வயிரும் பசிக்குமாத்தா !!!
வாழக்கா வறுவலுக்கு......
வாழ்க்கையெல்லாம் அடிமை ஆத்தா !!!

உன் தண்ணீ கொடத்துல பொறந்தேன் ....
என்ன தண்ணீ தூக்க வச்சுட்டியே  !!!
கண்ணெல்லாம் கண்ணீரு !!!
ஊரெல்லாம் உன் பேச்சு !!!
நெஞ்செல்லாம் உன் நெனப்புத்தான் !!!
மாண்டாலும் நீ தெய்வம் ....
எந்தன் கொலதெய்வம் ....
  ஆத்தா !!!!
                  --ஆனந்த்

Saturday, January 5, 2013

விவசாயிகள் தற்கொலை

அறுவடைக்கு முன்பே..... 
தன்னை அறுவடை செய்துக்கொண்ட....
 ஆறு நண்பர்கள் !!!!
 #விவசாயிகள் தற்கொலை
                              --ஆனந்த்

Friday, January 4, 2013

மூங்கில் எதற்கு பல்லாக்கு ஏற வேண்டும் .....
வில்லாகட்டும் !!!
வீரமாய் வலையட்டும் !!!
                                     -ஆனந்த்