வைரமுத்து - என் கவிதை காதலன்
இசையை தாண்டி வரிகளை ரசிக்க இவனுடைய தமிழ் தான் சொல்லி கொடுத்தது.
தேடலை பற்றி இவன் சொல்கையில் தேடல் புரிந்தது...
தேடி கிடைப்பதில்லை என்று
தெரிந்த ஒரு பொருளைத்
தேடி பார்ப்பதென்று - என்று மெய்
தேடல் தொடங்கியதே...
காதலை பற்றி இவன் சொல்கையில்..
சூரிய கடைசிக்கதிர் - புவி
சுடுகின்ற காலம்வரை
காரியம் நடந்திருக்கும் - மெய்க்
காதலும் வளர்ந்திருக்கும்.
பூமியின் சுழலச்சிக்கு - எண்ணெய்
போட்டு விடுவதெல்லாம்
சாமியால் ஆவதில்லை - காதல்
சக்தியால் ஆவதுண்டு.
பூமியை நேசிக்க சொன்னவன் , பூக்களை ரசிக்க சொன்னவன்,
பெண்ணை மதிக்க சொன்னவன், மண்ணை துதிக்க சொன்னவன்.....
நான் தோல்வி அடைந்து சோர்ந்த நேரங்களில்.....
சுடபட்டிருக்கமாட்டாய் நீ
தங்கமாக இல்லாவிட்டால்
சூடு தாங்கு
நகையாவாய்.
என்று என்னை பயனபடுதியவன்
எனகென்றே பல வார்த்தைகள் சொன்னான்.
இருக்கும் நாட்களை இரட்டிபாக்கு
சூரியன் நிலவு இரண்டிலும் விழித்திரு
படுக்கை போட்டு துயில் கொல்லாதே
துயில் வரும் பொது படுக்கை போடு
காலையில் பூமியில் உட்துளை இட்டு
மாலையில் பூமியின் மறுபுறம் வெளிப்படு
No comments:
Post a Comment