Friday, January 8, 2010

எங்கே? எங்கே? மனிதன் எங்கே?

அஜீத் நடித்து வெளிவர இருக்கும் படம் 'அசல்'. இப்படத்தில் அஜீத்குமாருக்காக, வைரமுத்து எழுதிய பாடல் சிவாஜி நடித்த 'புதிய பறவை' படத்தில் இடம்பெற்ற ``எங்கே நிம்மதி?'' என்ற பாடலுக்கு இணையாக, `அசல்' படத்துக்காக கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறாராம். அந்தப்பாடல் "எங்கே, எங்கே, மனிதன் எங்கே?'' எனத் தொடங்குகிறதாம்.




"எங்கே? எங்கே? மனிதன் எங்கே?

மனிதன் உடையில் மிருகம் இங்கே!

ஓநாய் உள்ளம் நரியின் கள்ளம்

ஒன்றாய்ச் சேர்ந்த உலகம் இங்கே...

வலிகளால் வந்த வரங்களால்

வாழ்க்கையில் ஞானம் கொண்டேன்...

காதல் என்றால் கண்ணில் யுத்தம்

கண்ணீர் எல்லாம் வெள்ளை ரத்தம்

உறவும் நட்பும் பிம்பம் பிம்பம்

உள்ளம் எங்கே நம்பும்? நம்பும்?

பொய்களின் கரைக்கு நடுவிலே

போகுதே வாழ்க்கை நதி!

ஜனனம் உண்மை மரணம் உண்மை!

தந்தானே-கடவுள் தந்தானே...

அந்த ரெண்டைத் தவிர எல்லாம்

பொய்யாய்ச் செய்தானே-மனிதன் செய்தானே...

காடும் மரமும்-என் காலில் புற்கள்

குன்றும் மலையும் கூழாங்கற்கள்

சாம்பலில் உயிர்க்கும் பறவை போல் சாதிக்கவே பறக்கின்றேன்..."



- இப்படிச் செல்கிறது இந்தப்பாடல். பரத்வாஜ் இசையில், வைரமுத்து எழுதிய இந்த பாடல், முதலில் பின்னணியில் மட்டும் ஒலிக்கும் பாடலாக இருந்தது. வைரமுத்துவின் யோசனைப்படி, அஜீத்குமார் வாய்விட்டு பாடும் பாடலாக மாற்றப்பட்டு இருக்கிறது.

No comments:

Post a Comment