Sunday, June 26, 2016

இறைவா ......!

உன் திமிருக்கு ...
நான் ஆள் இல்லை ..
காரணம் இல்லாமல் ...
பேசுவதும் வெறுப்பதும் ...
என்ன ஜென்மம் ...
நீ எல்லாம் !
அழகும் திமிரும் ...
ஆண்டவன் உனக்கு தந்த ...
வரம் இல்லை ...
சாபம் !
நீ உணர போவதும் இல்லை ..
நான் உன்னை வெறுக்க போவதும் இல்லை ....
இறைவா ...
எனக்கு ஒன்று தா ...
அது வரமோ சாபமோ ....
அவளை மறக்க வேண்டும் !
இறைவா ......!

Three years .....

மூன்று வருடம் ஓடி விட்டது ...
ஒரு சிறிய மாற்றமும் இல்லை ...
கிணற்றில் விழுந்த கல்லாக   இருந்தால்  பாசி பிடித்திருக்கும் ...
வெயிலில் கிடந்த இரும்பாக இருந்தால் துரு பிடித்திருக்கும் ....

இங்கு ....
அதே  அதே ...
இதே இதே ....
என்ன கொடுமை ....
இறைவா !

Three years .....

மூன்று வருடம் ஓடி விட்டது ...
ஒரு சிறிய மாற்றமும் இல்லை ...
கிணற்றில் விழுந்த கல்லாக   இருந்தால்  பாசி பிடித்திருக்கும் ...
வெயிலில் கிடந்த இரும்பாக இருந்தால் துரு பிடித்திருக்கும் ....

இங்கு ....
அதே  அதே ...
இதே இதே ....
என்ன கொடுமை ....
இறைவா !

Friday, June 17, 2016

அவளும் நானும்..... தேனும் இனிப்பும்....



அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அலையும் கடலும்
அவளும் நானும்
தவமும் அருளும்
அவளும் நானும்
வேரும் மரமும்

ஆலும் நிழலும்
அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும்
அவளும் நானும்

அவையும் துணிவும்
உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும்
அளித்தலும் புகழும்

(2)
மீனும் புனலும்
விண்ணும் விரிவும்
வெட்பும் தோற்றமும்
வேலும் கூரும்

ஆறும் கரையும்
அம்பும் வில்லும்
பாட்டும் உரையும்
நானும் அவளும்

நானும் அவளும்
உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும்
பூவும் மனமும்

நானும் அவளும்
உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும்
பூவும் மனமும்

அவளும் நானும்
தேனும் இனிப்பும்
அவளும் நானும்
சிரிப்பும் மகிழ்வும்

அவளும் நானும் 
திங்களும் குளிரும்
அவளும் நானும் 
கதிரும் ஒளியும்

அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அலையும் கடலும்
அவளும் நானும்
தவமும் அருளும்
அவளும் நானும்
வேரும் மரமும்

ஆலும் நிழலும்
அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும்
அவளும் நானும்

அவையும் துணிவும்
உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும்
அளித்தலும் புகழும்

- பாவேந்தர் பாரதிதாசன்

Thursday, June 9, 2016

மலரின் மொழியில்.....

மலரின் மொழியில்.....

Lord vinayaga ....



Everything starts from you !

In the front of solai Car Dash Board ! 

சில நாட்கள் !

பிஞ்ச செருப்பு ....
மஞ்சள் பூத்த  வெள்ளை சட்டை ....
சவரம் செய்யாத முகம் ....
இப்படியும் நகர்கிறது ..
சில நாட்கள் !

கண்மணியே

கண்களால் கவர்ந்தவள் ....
கண்களால் கொன்றவள் ...
கண்ணே என்
கண்மணியே ...
கண்களில் அன்பும் ஆயுதமும் கொண்ட ...
கண் அழகி நீ தானே !

Ice cream

Ice cream's r not just ice cream's !
#faluda

அனைத்தும் கவிதைதான் !

ஒரு நதிக்கரை ....
நிலா ...
மரம் ...
காற்று ...
பிச்சைக்காரன் ...
அள்ளி பூ ...
தவளை ...
தண்ணி பாம்பு ...
காதலி ...
கணவு  ...
நண்டு ...
வரப்பு ...
வயல்வெளி ...
சாரல் காற்று    ..
சாமங்கி பூ ...
ஒற்றை பாலம் ...
.................
அனைத்தும் கவிதைதான் !