பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே........
Tuesday, December 31, 2013
2014 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!
இல்லாமை இல்லாமல் போகவேண்டும் .....
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கவேண்டும் !!!!
2014 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!
Wish You A Very Happy New Year 2014.....
- பிரேம் ஆனந்த்
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கவேண்டும் !!!!
2014 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!
Wish You A Very Happy New Year 2014.....
- பிரேம் ஆனந்த்
Saturday, December 28, 2013
ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
Song: ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
Singer and Vocals: C. S. Jayaraman, Padmini
Performers: Padmini, Sivaji Ganesan
Movie: Thangap Padhumai (தங்கப் பதுமை)
Year: 1959
Star cast: Sivaji Ganesan, Padmini and T.R. Rajakumari
Music: M.S. Viswanathan & T.K. Ramamurthy
Lyrics: Pattukkottai Kalyanasundaram
அத்தான் நீங்கள் கொலைகாரராகொற்றவனைக் கொன்றீர்களாகூறுங்கள் அத்தான் கூறுங்கள் !
ஈடற்ற பத்தினியின் இன்பத்தை கொன்றவன் நான்
அவள் இதயத்தில் கொந்தளித்த இன்பத்தைக் கொன்றவன் நான்
வாழத் தகுந்தவளை வாழாமல் வைத்துவிட்டு
பாழும் பரத்தையினால் பண்புதனைக் கொன்றவன் நான்
அந்தக் கொலைகளுக்கே ஆளாகி இருந்து விட்டேன்
இனி எந்தக் கொலை செய்தாலும்
என்னடி என் ஞானப்பெண்ணே
என்னடி என் ஞானப்பெண்ணே
என்னடி என் ஞானப்பெண்ணே
ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
மனிதன் ! ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக்கண்ணுக்குள்ளே
ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக்கண்ணுக்குள்ளே
ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே
ஆரம்பமாவது ! மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
அத்தான் அத்தான்உங்கள் மீது கொடும்பழி வந்திருக்கிறதே அத்தான்என்மீது உண்மையாக அன்பிருந்தால்அஞ்சாமல் உண்மையை சொல்லுங்கள்யாருக்கும் அஞ்சாமல் சொல்லுங்கள் அத்தான்
அன்பைக் கெடுத்து நல்லாசையைக் கொன்றவன்
அஞ்சி நடப்பானோ ஞானப்பெண்ணே
அன்பைக் கெடுத்து நல்லாசையைக் கொன்றவன்
அஞ்சி நடப்பானோ ஞானப்பெண்ணே
துன்பத்தைக் கட்டி சுமக்கத் துணித்தவன்
சொன்னாலும் கேட்பானோ ஞானப்பெண்ணே
சொன்னாலும் கேட்பானோ ஞானப்பெண்ணே
ஆரம்பமாவது மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
அத்தான் உண்மையைக் கூற முடியாதபடிஅவ்வளவு பெரிய தவறு என்ன செய்து விட்டீர்கள்
தவறுக்கும் தவறான தவறை புரிந்துவிட்டு
தனிப்பட்டுப் போனவன் ஞானப்பெண்ணே...
தவறுக்கும் தவறான தவறை புரிந்துவிட்டு
தனிப்பட்டுப் போனவன் ஞானப்பெண்ணே
தனிப்பட்டுப் போனவன் ஞானப்பெண்ணே
பதறி பதறி நின்று கதறி புலம்பினாலும்
பயன்பட்டு வருவானோ ஞானப்பெண்ணே
பயன்பட்டு வருவானோ ஞானப்பெண்ணே
ஆரம்பமாவது ... மனிதன் ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக்கண்ணுக்குள்ளே
ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே
அத்தான் ! அத்தான் என்ன என்ன அத்தான்இது என்ன ?உங் உங்கள் கண்கள் எங்கே அத்தான்உங்கள் கண்கள் எங்கே அத்தான் ?அத்தான் ...இளவரசி ! நான் திரும்பும்வரை என் கணவருக்குஎந்தவித ஆபத்தும் நேராது என்று வாக்களித்தீர்களேஎங்கே என் கணவரின் கண்கள்அவர் கண்களைப் பறித்தது யார் ?அத்தான் அத்தான் அத்தான்நீங்களாவது சொல்லுங்கள் அத்தானுங்கள் கண்களைப் பறித்தது யார் ?சொல்லுங்கள்நீதி கேட்கிறேன் . கொடுமையை தீர்க்கிறேன் !
கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி மானே
வளர்த்தவனே வெறுத்து விட்டான்ண்டி
கண்ணை கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி மானே
வளர்த்தவனே வெறுத்து விட்டான்ண்டி
பொருத்தமான துணையிருந்தும்
பொங்கிவரும் அழகிருந்தும்
போனபக்கம் போக விட்டேன் பார்வையை
அவன் பொருத்திருந்தே புரிந்து கொண்டான் வேலையை
பொருத்தமான துணையிருந்தும்
பொங்கிவரும் அழகிருந்தும்
போனபக்கம் போக விட்டேன் பார்வையை
அவன் பொருத்திருந்தே புரிந்து கொண்டான் வேலையை
கண்ணை கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி மானே
வளர்த்தவனே வெறுத்து விட்டாண்டி
கருணையே வடிவமான தெய்வமா உங்கள் கண்களைப் பறித்தது ?
எதிரில் வந்து கெடுக்கவில்லை
இதயம் இடம் கொடுக்கவில்லை
எதிரில் வந்து கெடுக்கவில்லை
இதயம் இடம் கொடுக்கவில்லை
எங்கிருந்தோ ஏவி விட்டான் கிளியை
அது என் தலையில் போட்டதடி பழியை
கண்ணை கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி மானே
வளர்த்தவனே வெறுத்து விட்டாண்டி !
நீதி நிலை பெற என் நெற்றியில் குங்குமம் திகழஉண்மையைக் கூறுங்கள்உங்கள் மனைவி கேட்கிறாள்என் மஞ்சளும் குங்குமமும் கேட்கிறது அத்தான்
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கடி
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கடி
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி தங்கம்
சம்சாரம் ஏதுக்கடி
மனைவியை குழந்தையை மறந்து திரிந்தவனை
வாழ்த்துவதாகாதடி
மனைவியை குழந்தையை மறந்து திரிந்தவனை
வாழ்த்துவதாகாதடி தங்கம்
மன்னிக்க கூடாதடி
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி தங்கம்
சம்சாரம் ஏதுக்கடி
அத்தான் ...அத்தான் ...அத்தான் !
Sunday, December 15, 2013
மறவர் கூட்டம் !!!
உடல் நரம்பில் தமிழ்க்குருதி ஓடாதார்
ஒதிங்கிடுக; ஒருநாளில் முவேளைக்கே
குடல் நிரப்பும் தொழிலொன்றே பெரிதென்னும்
கோழையார்கள் வழிவிடுக; மடியார்செல்க !
விடல் அரிதம் அடிமைநலம் விரும்பிடுவார்
வேருண்டொதுங்கிக் கொள்க; தமிழ் மானங்காக்கும்
அடல்மறவர் வெங்களிற்றுக் கூட்டமென
அலைந்தெழுந்தார்; அவர்நடைக்குத் தடைசெய்யாமே !
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் (1963)
ஒதிங்கிடுக; ஒருநாளில் முவேளைக்கே
குடல் நிரப்பும் தொழிலொன்றே பெரிதென்னும்
கோழையார்கள் வழிவிடுக; மடியார்செல்க !
விடல் அரிதம் அடிமைநலம் விரும்பிடுவார்
வேருண்டொதுங்கிக் கொள்க; தமிழ் மானங்காக்கும்
அடல்மறவர் வெங்களிற்றுக் கூட்டமென
அலைந்தெழுந்தார்; அவர்நடைக்குத் தடைசெய்யாமே !
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் (1963)
Subscribe to:
Posts (Atom)